Goat: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தை பார்த்த சீரியல் நடிகை பாதிலேயே தப்பித்து ஓடி வந்ததாக பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இத்திரைப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். பொதுவாக விஜயின் திரைப்படப் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். ஆனால் முதல் முறையாக திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் விமர்சனத்தை தான் குவித்தது. இருந்தும் எதிர்பார்ப்பு அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டது.
ஆனால் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உயர்ந்தது. அதற்கு ஏற்ப படக்குழுவும் கொடுத்த பேட்டிகள் ட்ரெண்ட் அடிக்க கோட் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து வெளியான கோட் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இருந்தும் வசூல் வேட்டை நடத்தியது என்னவோ உண்மைதான். 500 கோடி வசூலை தாண்டி கோட் திரைப்படம் 50 நாட்களை சமீபத்தில் கடந்து இருக்கிறது.
இந்நிலையில் சன் டிவி சீரியல் நடிகை நிமிஷா பேசியிருக்கும் வீடியோவால் தற்போது கோட் மீண்டும் வைரலாகி வருகிறது. ஒரு பேட்டியில் அவரிடம், சமீபத்தில் நீங்கள் பார்த்து பிடிக்காமல் போன படம் என்ன என தொகுப்பாளர் கேட்க தற்போது வரும் எல்லா திரைப்படங்களுமே அப்படித்தான் இருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு படம் பாதியிலேயே எழுந்து ஓடிவரும் நிலைக்கு என்னை தள்ளியது எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து தொகுப்பாளர் கடைசியாக நீங்கள் பார்த்த படம் என்ன என கேள்வியை எழுப்ப சிக்க வைக்கிறார் எனத் தெரியாமல் கோட் என கூறிவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் நான் தல ரசிகை. எனக்கு தளபதியை பிடிக்கும். ஆனால் இப்படத்தில் சின்ன வயது விஜயை பார்க்கும்போது என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என கேட்க தோணுச்சு எனப் பேசுகிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகையின் பேச்சு மற்ற ரசிகர்களுக்கு குதுகலமாக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் கடுப்பில் கலாய்த்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியலில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…