பிரபல நடிகையிடம் அத்துமீறிய படக்குழு… ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ஷகீலா…

by ராம் சுதன் |
பிரபல நடிகையிடம் அத்துமீறிய படக்குழு… ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ஷகீலா…
X

Shakeela: நடிகைகளுக்கு படப்பிடிப்பு சமயத்தில் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு விஷயம் தன்னுடைய படப்பிடிப்பில் நடந்த போது அந்த ஹீரோயினிற்காக ஷகீலா இறங்கி செய்த வேலை குறித்து பேசி இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாக்களில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை என்றாலும், தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வரிசையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா தன்னிடம் ஹீரோ மற்றும் நடன இயக்குனர் நடந்து கொண்ட விஷயம் குறித்து வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். அதுவும் அவர் குறிப்பிட்ட பெயர் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா என்பதால் மேலும் சர்ச்சையை கிளப்பியது.

இதுபோல நடிகை ஷகீலா தனக்கு நடந்த நிறைய பிரச்சனைகளை வெளிப்படையாகவே தன்னுடைய பேட்டிகளில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் நடிகை ரூபஸ்ரீக்கு நடந்த விஷயம் குறித்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், நான் நடித்த ஒரு படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதுபோல நான் தங்கி இருந்த ஹோட்டல் ரூமில் எதிர்த்து அறையில் தான் அவருக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் அவருடைய ரூம் கதவை நால்வர் அதிகமாக குடித்துவிட்டு கதவை திற என சத்தம் போட்டுக் கொண்டே திட்டினர்.

நான் எப்போதுமே என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனியாக செல்ல மாட்டேன். என்னுடைய தோழர்கள் மற்றும் சகோதரருடன் செல்வேன். நாங்கள் நால்வர் இருந்ததால் அந்த ஆசாமிகளை அடித்து துரத்தினோம். ஆனால் அவர்கள் எங்களை அடித்தார்கள்.

அந்த நடிகை ஒப்புக்கொண்டு வந்திருந்தாலும் நால்வர் குடித்துவிட்டு வந்தால் அவரும் என்ன செய்ய முடியும்? ரூமிற்குள் கத்தி கதறிய அவரை இன்னொரு நடிகரின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தோம். இந்த விஷயத்தில் நடிகைகளே தவறு செய்கிறார்கள்.

Next Story