நேத்து பெரிய தல.. இன்னைக்கு குட்டி தல!.. ஷாலினி அஜித் பகிர்ந்த கியூட் வீடியோ...
Ajithkumar: அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகும். குறிப்பாக அஜித்தின் ரசிகர்கள் பகிர்வார்கள்.
ஆத்விக் சிறுவயதாக இருக்கும் முதலே அவரின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகும். பெரும்பாலும், அவரின் அம்மா ஷாலினியுடன் அவர் வெளியே செல்லும்போதும், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகும்.
ஒருகட்டத்தில், ஷாலினியே சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர துவங்கினார். சமீபகாலமாக தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அஜித்தின் தனது குடும்பத்தினருடன் வெனிஸ் நகரத்தில் இருக்கிறார்.
அதற்கு காரணம் வெனிஸ் நாட்டில்தான் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், விடாமுயற்சி படத்தின் ஒரு பாடலையும் அங்குதான் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அஜித் வெனிஸ் நாட்டில் இருந்துதான் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில், ஷாலினி வெனிஸ் நகரத்தின் சாலையில் கணவர் அஜித்துடன் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், மகன் ஆத்விக்குடன் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், ‘வெனிஸ் சாலையில் சிறிய பாதங்கள்.. பெரிய சாகசங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு ‘நேற்று பெரிய தல.. இன்று குட்டி தல’ என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.