தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று அசதி வருகின்றார். ஹீரோவாக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த நடிகர் தனுஷ் திடீரென்று இயக்குனர் அவதாரம் எடுத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பா பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படம் மக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனராக களம் இறங்கினார். தனது 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு பக்கம் இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் தான் கமிட் செய்த படங்களிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
ஏற்கனவே குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மூன்று படங்களை இயக்கி முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக தான் இயக்க இருக்கும் 4வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இந்த படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை டாவின் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மற்றொரு நடிகை இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கின்றார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் இட்லி கடை திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கின்றார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…