Categories: Cinema News latest news

துபாய் கிளம்பும் அஜித்.. குடும்பமாக சேர்ந்து வழியனுப்பி வைத்த எமோஷனல் வீடியோ!..

நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்திருக்கும் நடிகர் அஜித் அடுத்ததாக புதிய திரைப்படம் எதையும் கமிட் செய்யாமல் இருந்து வருகின்றார். அதற்கு காரணம் ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதுதான்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த கார் பந்தயத்தை முடித்துவிட்டு தான் அடுத்ததாக மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கின்றார். இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விடாமுயற்சி: நடிகர் அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து வருகிறார்கள். எது எப்படியோ தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது.

இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த படத்தின் படப்பிடிப்பையும் கையுடன் முடித்துவிட்டார். நடிகர் அஜித் இரண்டு பேட்ச் ஒர்க் மற்றும் பாடல் காட்சிகள் அனைத்துமே சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கலுக்கு ரிலீசாகவில்லை என்று லைக்கா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

படம் ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு பயணம்: இதற்கிடையில் நடிகர் அஜித் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். தனது மகளின் 17 வது பிறந்தநாளையும் சிங்கப்பூரில் எளிமையாக கொண்டாடி இருந்த நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதை தொடர்ந்து நேற்று சென்னை திரும்பி இருக்கும் குடும்பத்தினர் பின்னர் நடிகர் அஜித்தை கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய்க்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். மனைவி, மகள், மகன் என அனைவரும் கட்டி தழுவி வழி அனுப்பி வைத்த வீடியோவானது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜித் சினிமாவில் எப்படி மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறாரோ? அதேபோல் அவருக்கு பிடித்த கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.

Published by
ramya suresh