என்னதான் ‘தாத்தா வராறுனு’ போட்டாலும் நாங்க எதிர்பார்க்குறது வேற! ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ் எலிமெண்ட்

நாளை இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 750 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். மொத்தமாக 5000 ஸ்கிரீனில் படம் ரிலீஸ் ஆகப்போவதாக சொல்லப்படுகிறது. அனைவரும் எதிர்பார்த்த இந்தியன் 2 திரைப்படம் நாளை ரிலீசாகும் நிலையில் டிக்கெட் விற்பனை பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

இந்த அளவு இந்தியன் 2 படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்குமேயானால் அதற்கு காரணம் இந்தியன் படத்தின் முதல் பாகம் அடைந்த வெற்றி தான் காரணமாகும். நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழலை வெளிப்படையாக அந்த படத்தில் காட்டியிருப்பார் சங்கர். இந்த லஞ்ச ஊழலை எப்படி அடக்குவது எப்படி ஒழிப்பது என்ற அடிப்படையில் அந்தப் படத்தை உருவாக்கி இருப்பார்.

அது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகமும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் சங்கர் இருந்து வருகிறார். படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் ரசிகர்களின் ஆதங்கத்துக்கு காரணமான ஒரு விஷயம் என்னவென்றால் படத்தில் அமைந்த மியூசிக் தான்.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்திருப்பார் . ஆனால் இந்தியன் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு கதை ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் ஏ ஆர் ரகுமானின் இசை மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது. படத்தில் அமைந்த ஒவ்வொரு பாடலும் நம்மை புல்லரிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக கப்பல் ஏறி போயாச்சு என்ற பாடலை இப்போது வரைக்கும் மக்கள் பார்க்கும் பொழுது அவர்கள் அறியாமல் நாட்டுப்பற்று எழும்.

ஆனால் இந்தியன் 2 படத்தை பொறுத்தவரைக்கும் அந்த மாதிரி ஒரு பாடல் கூட அமையவில்லை. இதுதான் ரசிகர்களின் பெரிய ஆதங்கமாக இருந்தது. இதை போக்கும் விதமாக ஷங்கர் ஒரு ஐடியாவை கொடுத்து இருக்கிறாராம் . அதாவது இந்தியன் படத்தின் பிஜிஎம் இந்தியன் 2 படத்தில் அங்கங்கே ஒலிக்கும்படியாக அனிருத்திடம் செய்ய சொல்லி இருக்கிறாராம். அதனால் ஏ ஆர் ரகுமானின் இசை இந்தியன் 2 படத்திலும் அவ்வப்போது கேட்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Related Articles
Next Story
Share it