Categories: Cinema News latest news

சினிமாவுக்கு வர அப்பா போட்ட கண்டிஷன்!.. அப்ப சீக்கிரமே நடையை கட்டிடுவாங்க போலயே!..

Aditi Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகள் அதிதி ஷங்கர். இவர் வெளிநாட்டில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து இரண்டாவதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். கடைசியாக பொங்கல் பண்டிகைக்கு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் நேசிப்பாயா என்கின்ற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருந்த நிலையில் படம் சுமாரான வெற்றியை பெற்றது என்று கூறலாம். சினிமாவில் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் அசதி வருகின்றார். தான் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களிலும் பாடல்களை பாடியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அதிதி ஷங்கர் தனது சினிமா கெரியருக்கு தந்தை சங்கர் போட்ட கண்டிஷன் குறித்து பேசி இருக்கின்றார். டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் தனது சினிமா ஆசை குறித்து தந்தை சங்கரிடம் கூறியிருக்கின்றார் அதிதி. சினிமாவில் பாடகியாக தானே ஆகப்போகிறாய் என்று கேட்டிருக்கின்றார்.

அதற்கு பதிலளித்த அதிதி இல்லை தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது என கூறி இருக்கின்றார். அதனை தொடர்ந்து நீண்ட யோசனைக்கு பிறகு சம்மதம் தெரிவித்த ஷங்கர் ஒரு கண்டிஷனையும் போட்டாராம். அதாவது சினிமாவில் நீ ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் டாக்டர் வேலையை செய்ய வேண்டும். அதற்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டுதான் சினிமாவில் நடிக்க வந்ததாக அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகின்றார். தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது ஒன்ஸ்மோர் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் கருடன் திரைப்படத்தின் ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார். தனது தந்தை கூறியது போலவே சினிமாவில் தொடர்ந்து தன்னால் ஜெயிக்க முடியவில்லை என்றால், தனது டாக்டர் தொழிலை தொடர்வதிலும் எனக்கு மகிழ்ச்சி தான்’ என்று கூறியிருக்கின்றார்.

Published by
ramya suresh