Connect with us

Cinema News

கேம் சேஞ்சர் படம் பாசிட்டிவாதான் சொல்றாங்க!.. ஷங்கர் எங்க வாழ்றாருன்னே தெரியலயே!…

கேம் சேஞ்சர்: தமிழ் சினிமாவில் எந்திரன், 2.0 போன்ற அதிக பட்ஜெட் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இந்திய அளவில் இவரின் படங்கள் கவனிக்கப்படும். இவரின் படங்களில் பாடல்களை வெளிநாடுகளுக்கு சென்று மிகவும் பிரம்மாண்டமாக எடுப்பார். அதற்காகவே இவரின் படங்களுக்கு ரசிகர்கள் செல்வார்கள்.

பலகோடி பட்ஜெட்: தொடர் வெற்றிகளை கொடுத்தவர் என்பதால் இவரின் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் பல கோடிகளை கொட்டுவார்கள். ஆனால், கடந்த சில வருடங்கள் ஷங்கருக்கு சரியாக அமையவில்லை. ஷங்கரின் நடிப்பில் இந்தியன் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது.

இந்தியன் 2: அதிக பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 படம் ரசிகர்களை கவராமல் ட்ரோலில் சிக்கியது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரவே பாக்ஸ் ஆபிசில் படம் தோல்வி அடைந்தது. நல்லவேளையாக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை நல்ல விலைக்கு விற்றதால் லைக்கா நிறுவனம் கொஞ்சம் தப்பித்தது.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்தை இயக்கும்போதே தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை இயக்கினார் ஷங்கர். தில் ராஜூ தயாரிப்பில் 450 கோடி செலவில் உருவான இந்த படம் கடந்த 10ம் தேதி பல மொழிகளிலும் வெளியானது. படம் பார்த்தவர்கள் இந்தியன் 2-வுக்கு இது பரவாயில்லை என சொன்னார்கள்.

கேம் சேஞ்சர் வசூல்: படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதால் எதிர்பார்த்த வசூலை இப்படம் பெறவில்லை. படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியும் 120 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. முதல் நாள் முடிந்தவுடன் இப்படத்தின் வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் அதன்பின் அதுபற்றி அறிவிக்கவே இல்லை.

வழக்கமான படம் தோல்வி என்றால் மட்டுமே வசூல் நிலவரத்தை சொல்லமாட்டார்கள். எல்லா ஊடகங்களுமே படம் தோல்வி என எழுதி வரும் நிலையில் இதை ஷங்கர் ஒப்புக்கொள்ளவில்லை. ‘கேம் சேஞ்சர் படம் தொடர்பான விமர்சனங்களை நான் பார்க்கவில்லை. நான் கேள்விப்பட்ட வரைக்கும் நல்ல விமர்சனம்தான் வந்துகிட்டு இருக்கு’ என சொல்லி இருக்கிறார். இதனையடுத்து ‘ஷங்கர் எந்த உலகத்துல வாழ்றாருன்னே தெரியலயே’ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top