கேம் சேஞ்சராவது மண்ணாங்கட்டியாவது.. ஒட்டுமொத்தமா ஷங்கரை காலி பண்ண அக்கடதேசம்
இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் ஷங்கர் மீது இருந்த ஒரு நம்பிக்கையை தலைகுப்பற கவிழ்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இது நாள் வரை சங்கரை இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்று மிகப் பெருமையாக பேசி வந்த நிலையில் இந்த ஒரு படம் அத்தனை பெருமையையும் ஒரேடியாக சாய்த்து விட்டது. ஷங்கர் கெரியரில் வசூலில் மண்ணை கவ்விய திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் அமைந்ததாக சொல்லப்படுகிறது.
அவருடைய படங்களை பொருத்தவரைக்கும் விமர்சன ரீதியாக பார்ப்பதை விட வசூலில் மிகப்பெரிய சாதனையை தான் இதுவரை ஷங்கரின் படங்கள் செய்து வந்தன. ஆனால் இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் வசூலில் பெரும் ஏமாற்றத்தையே சந்தித்திருக்கின்றன. இதுவரைக்கும் சங்கர் படத்தை யாரிடமும் போட்டுக் காட்டவில்லையாம். அவருடைய ஒரு பழக்கமும் இதுதான் என சொல்லப்படுகிறது.
தன் படத்தை ரிலீஸ் - க்கு முன்பு யாரிடமும் இதுவரை போட்டு காட்டியதே இல்லையாம். அது மட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் ஒரு பெரிய குறையாக பார்க்கப்பட்டது படத்தின் நீளம். அதையும் எடிட்டில் கட் செய்ய மாட்டேன் என்றும் பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு ரசிகர்கள் பார்த்து தயவுசெய்து நீளத்தை குறையுங்கள் என சொன்ன பிறகே படத்தின் நீளத்தை குறைக்க சம்மதம் தெரிவித்தாராம்.
அதிலும் ஒரு 20 நிமிட காட்சியை குறைத்தால் ஓரளவு படம் தேரும் என்று கூறிய நிலையிலும் 11 நிமிடங்கள் மட்டுமே கட் செய்து இருக்கிறாராம் ஷங்கர் .இதில் எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடாது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க ஆந்திராவில் ராம் சரணை காலி செய்ய காத்திருக்கும் தமிழ் இயக்குனர் என பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டே இருக்கின்றதாம்.
அதற்கு காரணமும் இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் ரிசல்ட் தான். ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களை எடுத்து வந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இந்தியன் 2 ரிலீஸ் ஆன பிறகு ஆந்திராவில் ராம்சரனின் ரசிகர்களும் பெரும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்தப் படத்தை தயாரிப்பது தில் ராஜு. அதனால் கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆவதற்கு முன் கேம் சேஞ்சர் படத்தை தில் ராஜு போட்டுக் காட்டும் படி சொல்லுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என தில்ராஜு சொன்ன நிலையில் அதற்கு சங்கர் சம்மதிக்கவே இல்லையாம். நான் சொல்லாமல் ரிலீஸ் செய்தியை அறிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம் சங்கர்.
ஆனால் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட்டுக்கு பிறகு ஷங்கரின் பேச்சு அங்கு எடுபடாது என்பதை போல ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் இந்தியன் 2 திரைப்படம் ஷங்கரின் ஒட்டுமொத்த புகழையும் உடைத்து விட்டதாகவே தெரிகிறது.