கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த வாரம் வெளியான படைத்தலைவன் திரைப்படம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 2.18 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்றும் 2 கோடிக்கும் மேல் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த கோட் திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இந்த படத்தில் கொண்டு வந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்தை மீண்டும் பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருவதாக கூறுகின்றனர்.
புதிய படங்கள் பெரிதாக வசூல் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், படைத்தலைவன் திரைப்படம் தினமும் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்வது சிறப்பான ஒன்று என்கின்றனர்.
இளையராஜா இசையில் படைத்தலைவன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் விதமாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், “ உசுருக்கு உசுராக என்கிற வீடியோ பாடலை தற்போது படைத்தலைவன் படக்குனு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
கும்கி படத்தில் யானையுடன் விக்ரம் பிரபு நடித்ததை போலவே, இந்த படத்திலும் சண்முக பாண்டியன் யானையுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும், அதன் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்வது, ஆத்துக்கு அழைத்துச் சென்று அதை குளிப்பாட்டுவது, குடும்பத்துடன் ஒருவராகவே அனைவரும் ஒன்றாக வெளியே யானையுடன் சேர்ந்து இரவு உணவை உண்பது, பானை செய்யும் அப்பாவுக்கு உதவி செய்வது என ஏகப்பட்ட அழகான காட்சிகளும் அருமையான பாடல் வரிகளுடன் உள்ள நிலையில், பாடல் முழுவதுமே கேட்பதற்கு காதுகளுக்கு இதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படைத்தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடித்து வந்த கொம்புச் சீவி திரைப்படம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், விரைவில் அந்த படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்ன கேப்டன் என மக்கள் சண்முக பாண்டியன் அழைக்க ஆரம்பித்துள்ளனர். அப்பாவின் பெயரை காப்பாற்றும் விதமாக நல்ல கதைகளை தேர்வு செய்து, நல்ல நடிப்பையும் சண்முக பாண்டியன் வழங்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…