ஏற்கனவே குழந்தை இருக்கு… சிங்கிள் தாய் நான்… ரியாஸ்கான் மருமகளின் கண்ணீர்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:03  )

Riyaskhan: ரியாஸ் கான் மகனும் நடிகருமான ஷாரிக் சமீபத்தில் ஜெனிபர் என்பவரை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கும் நிலையில் ஷாரிக் மனைவி தெரிவித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக். இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டு முதல் சில வாரங்களிலேயே வெளியேறினார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகுடம் சூடினார்.

ஷாரிக் பென்சில் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் மரிய ஜெனிபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் முதல்முறையாக பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில் பேசிய ஷாரிக் மனைவி ஜெனிபர், நான் ஒரு சிங்கிள் மதர். எனக்கு பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்வதுதான் எனக்கு முக்கியம் எனக்கு தோன்றியது. அதனால் இரண்டாம் திருமணம் குறித்து நான் யோசிக்கவே இல்லை. வரும் குடும்பம் என் பெண்ணை சரியாக கவனித்துக் கொள்வார்களா என்ற பயத்திலேயே இருந்தேன்.

ஆனால் ஷாரிக் என் மகளை அவருடைய பெண்ணாக தான் பார்த்துக் கொள்கிறார். அதனால் தான் அவர் மீது எனக்கு காதல் வந்தது. அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக என்னுடைய மாமனார் மற்றும் மாமியாரை பார்க்க போகும்போது பயமாக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு என் மகள் சாராவை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்களுடைய பேத்தியாகவே பார்த்துக் கொள்கின்றனர். என்னுடைய மாமனார் ஷூட்டிங் சென்றாலும் கால் செய்து என்னுடைய மகளை அடிக்கடி விசாரிப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

குழந்தையுடன் நான் திருமணம் செய்து கொண்டதற்கு என்னை பலர் மோசமாக விமர்சித்தனர். ஆனால் ஷாரிக் மற்றும் அவருடைய தந்தை என்னை ரொம்பவே பாதுகாத்ததால் அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். எட்டு வருடமாக சிங்கிள் மதராக இருந்த ஜெனிபரை ஷாரிக் திருமணம் செய்து கொண்டிருப்பதற்கு அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Next Story