பார்த்த ஒரு வாரத்தில் காதல்... கனவுல பார்த்தது நிஜத்துல நடந்தது... ஷாரிக் & மரியா லவ் ஸ்டோரி...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:13  )

ரியாஸ்கானின் மூத்த மகனான ஷாரிக் மரியா ஜெனிபர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 9 வயதில் ஜாரா என்கின்ற மகள் இருக்கின்றார். இதை தெரிந்தது ஷாரிக் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமீப நாட்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர் ரியாஸ் கான் மற்றும் அவரின் மனைவி உமர் ரியாஸ் ஆகியோரின் மூத்த மகன் தான் ஷாரிக். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவருக்கு எந்தவித வாய்ப்பு இல்லாத காரணத்தால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கின்றார் ஷாரிக். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாரிக்கு திருமணம் நடைபெற்றது. இவர் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது. சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 9 வயதில் ஜாரா என்கின்ற மகள் இருக்கின்றன. இருப்பினும் ஷாரிக் மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரது மகளை தன் மகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருந்த ஷாரிக் மற்றும் மரியா இருவரும் தங்களின் முதல் சந்திப்பு மற்றும் காதல் குறித்து பகிர்ந்து இருக்கிறார்கள். அதாவது ஷாரிக் ஜிமில் மரியாவை முதன் முதலில் தான் பார்த்ததாகவும், முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்து விட்டதால் அவரை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றார்.

பின்னர் அவருடன் பழகிய ஒரு வாரத்திலேயே தனது காதலை தெரிவித்து விட்டாராம். சிறிது நாட்கள் காதலித்த பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஷாரிக் அவர்களிடம் சென்று பேசியிருக்கிறார். தனது பெற்றோருக்கும் மரியாவை காட்டிலும் அவரது மகள் ஜாராவை மிகவும் பிடித்து விட்டது என்று கூறியிருந்தார்.

மேலும் தனது கனவில் மரியா முழுக்க முழுக்க வெள்ளை நிற உடையில் மணமகள் கோலத்திலும், சுற்றிலும் அவரின் தோழிகள் அதே வெள்ளை நிற உடையில் இருப்பது போன்று கனவு வந்ததாகவும் அந்த கனவு தனது திருமணத்தின் போது நினைவானது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். இது குறித்து நான் மரியாவிடம் தெரிவித்த போது என்ன ஜோக் செய்கிறீர்களா என்று அவர் என்னை கிண்டல் செய்தார்.

மேலும் மரியா பேசியபோது ஷாரிக் என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று கூறவே இல்லை. எடுத்தவுடன் திருமணம் செய்வதை பற்றி தான் பேசினார். தன்னுடன் இருக்க விரும்புவதாகவும் என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்றுதான் அவர் கேட்டதாக தனது காதல் கதையை வெளிப்படுத்தினார்.

Next Story