பேரனான பிக்பாஸ் சிவகுமார் மீது சிவாஜி குடும்பத்தில் இருக்கும் வெறுப்பு என்ன? அதிர்ச்சி பின்னணி…

Shivakumar: தமிழ் சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் எப்பொழுதுமே பிரச்சனை என்பது ஓயாத விஷயமாக தான் இருக்கும். ஆனால் சில பிரபலங்களின் வீட்டு விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கும்.
இப்படி ஒரு பிரபலமாக தான் இருக்கிறார் சிவகுமார். இவர் பிரபல நடிகர் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு பிறந்தவர். சிவகுமார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்த போது, அவருடைய நடிப்புக்கான ரீல்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவியது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அவர் உள்ளே வரும்போது ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடிப்பு திறமையால் தன் பக்கம் இருப்பார் என பலரும் அவர் மீது நம்பிக்கை வைக்க ஆனால் அவரால் சில வாரங்கள் கூட நிகழ்ச்சிக்குள் தாக்கு பிடிக்க முடியாமல் கடந்த வாரம் வெளியேறினார்.
நிகழ்ச்சி போல் எங்குமே தன்னை சிவாஜியின் பேரன் என சொல்லிக் கொள்ளாதவர் சிவகுமார். இதற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறதாம். தன்னுடைய அம்மாவின் இறுதிக்காலத்தில் தந்தையும் அவருடைய குடும்பமும் எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னை எப்போதுமே மீனாட்சி ராம்குமாரின் மகனாக மட்டுமே காட்டிக்கொள்ள விரும்புகிறார்.
பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சி மகன் தான் ராம்குமார். மீனாட்சியை தன் மனைவி என்றும், சிவகுமாரை தன்னுடைய மகன் என்றும் ராம்குமார் சொல்லிவிட்டாலும் இருவரும் பிரிந்து தான் இருந்து வருகின்றனர். இதற்குரிய காரணம் பெரிதாக வெளியில் சொல்லப்படவில்லை.
ராம்குமாருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் இருந்தார். இந்த ஜோடிக்கு பிறந்தது தான் நடிகர் துஷ்யந்த், தர்ஷன் உள்ளிட்டவர்கள். கண்ணம்மாள் மற்றும் மீனாட்சி இருவரில் யார் முதல் மனைவி என பல இடங்களில் விளக்கமாக சொல்லப்படவில்லை. இது குறித்து சிவாஜி குடும்பத்தில் என்ன நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகவில்லை.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே ராம்குமார் மற்றும் பிரபுவின் சகோதரிகள் சொத்தை ஏமாற்று விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில், சிவகுமாரை உள்ளே விடுவதால் மேலும் சிக்கல் வரும் என்பதும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சாகி வருகிறது.
இருந்தும் சிவகுமார் தன்னுடைய தாயின் கடைசி காலத்தில் வராத குடும்பத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.