எப்படியாவது புது படங்களின் அப்டேட் கிடைத்து விடாதா என விமான நிலையத்திலேயே பல பத்திரிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் படப்பிடிப்பிற்காக மாநிலம் விட்டு மாநிலம் போகும் நடிகர்கள் விமானத்தின் மூலம் போவதால் எப்படியும் அங்கு நடிகர்களை சந்தித்து விடலாம். அவர்களிடம் ஏதாவது ஒரு அப்டேட்டை வாங்கி விடலாம் என அங்கேயே கிடக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனை வளைத்து போட்டனர் பத்திரிக்கையாளர்கள். அவரிடம் கமலை பற்றியும் கூலி திரைப்படத்தைப் பற்றியும் சில கேள்விகளை கேட்டனர். கூலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். கூலி படத்தில் பொண்ணாக நடிக்கிறீர்கள் என்று கேட்டதும் நான் பொண்ணு தாங்க என சிரித்துக்கொண்டே கூறினார் ஸ்ருதிஹாசன்.
இல்லை ரஜினிக்கு மகளாக நடிக்கிறீர்களே அதைப் பற்றி எனக் கேட்டபோது கூலி திரைப்படத்தைப் பற்றி லோகேஷ் கனகராஜ் எல்லாமே சொல்வார் என அந்த அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் கடந்து விட்டார். அதைப்போல கமல் உலக நாயகனிலிருந்து இப்போது விண்வெளி நாயகனாக மாறி இருக்கிறார். அதைப்பற்றி என கேட்டபோது அவர் எனக்கு எப்போதுமே அப்பாதான் எனக் கூறினார்.
இல்லை அந்த பெயர் பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்டபோது எனக்கு எந்த ஒரு ஒப்பினியனும் இல்லை. அவர் எனக்கு எப்போதுமே அப்பாதான் எனக் கூறினார். அவருடைய அரசியல் பற்றி உங்களுடைய கருத்து என கேட்டபோது அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என சொல்லி கடந்து விட்டார் சுருதிஹாசன். தக் லைப் திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாக சமீபத்திய ஒரு பேட்டியில் ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.
hasan
கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக வருகிறார் என்று சில பேரும் இல்லை சத்யராஜுக்கு மகளாக தான் வருகிறார் என்று ஒரு சில பேரும் கூறி வருகிறார்கள். ஆனால் படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று மட்டும் சொல்லப்படுகிறது. தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது தமிழிலும் தன்னுடைய அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறார். கூலி தரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து அவர் என்னென்ன படங்களில் நடிக்க போகிறார் என்பது பற்றிய தகவல் இனிமேல் தான் தெரியவரும்.
