Cinema News
மேடை போட்டு கூட்டம் கூடுறது பெரிய விஷயமில்லை… சித்தார்த் யாரை சொல்றாரு தெரிதா?
Siddharth: நடிகர் சித்தார்த் தன்னுடைய பேட்டி ஒன்றில் மேடை போட்டு கூட்டம் கூடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாகவே தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் தங்களுக்கு தோன்றிய பொதுவெளியில் வெளிப்படையாக சொல்வதால் ரசிகர்களிடம் விமர்சனத்தையும் குவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த் எப்போதுமே தனக்கு தோன்றிய விஷயத்தை அப்பட்டமாக பேசி விடுவார்.
சமீபத்தில் சித்தார்த் பிரபல யூட்யூபர் மதன் கௌரியுடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்பொழுது பேசியவரிடம் புஷ்பா 2 முதல் நாள் காட்சியில் நடந்த தள்ளுமுள்ளு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சித்தார்த், இந்தியாவில் கூட்டம் கூடுவது பெரிய விஷயம் இல்லை. ஒரு மேடையை போட்டால் அதை வேடிக்கை பார்க்க பலர் கூட தான் செய்வார்கள். கட்டுமானத்தில் ஜேசிபி நின்றாலே அதை வேடிக்கை பார்க்க இந்தியாவில் கூட்டம் அதிகமாக தான் கூடும்.
எங்கள் காலத்தில் இதை பிரியாணி குவாட்டர் என கலாய்த்தது உண்டு. கூட்டம் கூடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. கரகோஷம் எல்லாம் ஒரு மேட்டர் இல்லை. அப்படி பார்த்தால் தற்போது இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல் கட்சியுமே பெரிய இடத்தில் தான் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
புஷ்பா 2 படத்தை விமர்சிப்பதாக பேசியிருந்தாலும் தற்போது நடிகர் விஜயின் ரசிகர்களும் சித்தார்த்தை விமர்சித்து வருகின்றனர். நடிகராக இன்னொருவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாமல் இப்படி விமர்சிப்பது எப்படி சரி ஆகும். உங்களுக்கு பொறாமை அதனால் தான் இப்படி பேசுகிறீர்கள் என ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சித்தார்த் தன்னுடைய தயாரிப்பில் முதல் முறையாக உருவாக்கிய சித்தா நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் நடித்த கேரக்டர் மிகப்பெரிய விமர்சனத்தை அவருக்கு வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த பேட்டியின் மூலம் சித்தார்த் சிக்கலில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.