STR: படத்துல இதான் ஹைலைட்டே… அமரனுக்கு திடீர் ட்வீட் போட்ட எஸ்டிஆர்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:55  )

STR: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிலம்பரசன் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு பதிவிட்டிருக்கும் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மறைந்த மேஜர் முகந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக படத்தை ரபேக்கா வர்கீஸ் கேரக்டரில் நடித்துள்ள சாய் பல்லவி தூக்கி சுமந்து இருக்கிறார். படம் வெளியான 6 நாட்களில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் மிகப்பெரிய மகுடம் என்று கூட சொல்லலாம். ரசிகர்கள் தொடர்ச்சியாக பாராட்டி வரும் சூழ்நிலையில் பிரபலங்களும் அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தொடர்ச்சியாக தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதல் முறையாக ரஜினி காந்த் தன்னுடைய வாழ்க்கை வீடியோ பதிவு மூலம் அமரன் திரைப்பட குழுவிற்கு தெரிவித்தார். தொடர்ந்து நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியது குறித்தும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில், முழு மனதுடன் அமரனை ரசித்தேன். ஒரு அருமையான படம். ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளனர்.

கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அசாதாரண படைப்புகளை ராஜ்கமல் கையாண்டு வருகிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி இருக்கிறது. எடிட்டர் கலைவாணனுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

மிரள வைக்கும் காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் சாய் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு மாஸ்டர் அன்பறிவுக்கும் பாராட்டுக்கள். ராஜ்குமார் பெரியசாமி உண்மை சம்பவத்தை ரசிகர்களுக்கான படமாக மாற்றியது பெருமைக்குரியவராகி இருக்கிறார். சின்ன சின்ன காட்சிகளுக்கும் அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பு கதையில் உயிரோட்டத்தை கொடுத்துள்ளது.

Next Story