ஒரு வழியா ஐசரி கணேஷ் இழுப்புக்கு வந்த சிம்பு.. மாஸ் கூட்டணியில் உருவாகப் போகும் திரைப்படம்
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சிம்பு இன்று ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு லவ்வர் வாயாக சார்மிங் ஹீரோவாக பெண்களை கொள்ளை கொண்ட ஒரு நடிகராக இருந்து வந்த இவர் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியான நடிகராக மாறி இருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய செகண்ட் இன்னிங்ஸில் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள்.
மாநாடு திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற படங்களில் சவாலான கேரக்டர்களை எடுத்து நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றார்.
இந்த நிலையில் ஐசரி கணேசுக்கும் சிம்புவுக்கும் சில பிரச்சனைகள் இருந்து வந்தது. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக சமாதானத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றியடைந்த படமான 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு படத்தின் கதையை லைக்காவிற்கு சொல்ல போக லைக்கா நிறுவனமோ இவரை காத்திருப்பில் வைத்திருந்ததாம்.
இதை அறிந்த ஐசரி கணேஷ் ஜூட் ஆண்டனி ஜோசப்பிடம் அந்த கதையை கேட்டு அந்த கதை அவருக்கு பிடித்து போக இதை சிம்புவுடன் சொல்ல சொல்லி இருக்கிறார். இவரும் சிம்புவிடம் இந்த கதையை சொல்ல சிம்புவுக்கும் இந்த கதை மிகவும் பிடித்து விட்டதாம் .
அது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் சிம்புவுடன் மோகன்லால் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஒரு தகவல் பேசப்படுகிறது.