இனிமே சிம்புவோட ஆட்டம்தான்!.. சும்மா தெறிக்கவுடப் போறாரு!.. பரபர அப்டேட்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:41  )

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சிம்பு. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்களான வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்ல கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு.

இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற படங்களுக்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. தக் லைஃப் திரைப்படம் தான் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்த படத்திற்கு பிறகு சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. சிம்புவின் கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும் அவர் நடிக்க வேண்டிய படங்கள் என ஒரு சில படங்கள் இருக்கின்றன. ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் கண்டிப்பாக நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

அதோடு தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் சிம்பு ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதுபோக பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வைத்திருக்கிறார் சிம்பு .அதோடு 2018 என்ற மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளியாகும் என்றும் தெரிகிறது. அதனால் இந்த படங்களில் அடுத்து சிம்பு எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை சிம்புவே சொன்னால்தான் ரசிகர்களுக்கு தெரிய வரும் என இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

அதனால் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்களால் அவருடைய ரசிகர்கள் மிக உற்சாகமாக இருக்கின்றனர். இனிமேல் சினிமாவில் சிம்புவால் மீண்டு வரவே முடியாது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் முழுவதுமாக தன்னுடைய தோற்றத்தை மாற்றி மிகவும் ஸ்டைலாக கெத்தாக வந்து இறங்கினார்.

அவருடைய லுக்கை பார்த்ததுமே இனிமேல் இவருடைய ஆட்டம் தான் என அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் பத்துதல படத்திற்கு பிறகு அவருடைய படம் ரிலீசாகவில்லை. அடுத்தடுத்து சில பல பிரச்சனைகள் வந்தன. எல்லாம் முடிந்து தக் லைஃப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட ரிலீஸ் ஆன பிறகு அடுத்தடுத்து அவருடைய படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Next Story