25 நாளில் சலிச்சு போச்சு!.. 2ம் பாகத்துக்கு நோ சொன்ன சிம்பு.. காரணம் என்ன தெரியுமா?..

தமிழ் சினிமாவில் எந்த அலட்டலும் இல்லாமல் கிளாசிக்கான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கௌதம் மேனன் அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.
காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த கௌதம் மேனன் கடைசியாக ஜோஷ்வா என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இயக்கத்தை காட்டிலும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் டாமெனிக் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருக்கின்றார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌதம் மேனன் தான் கடந்து வந்த திரைப்பயணம் குறித்து பேசி இருந்தார்.
நடிகர் சூர்யா, தனுஷ் தொடங்கி தற்போது சிம்புவையும் விட்டு வைக்கவில்லை. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கு முன்னதாக நடிகர் சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ஆனால் வெந்து தணிந்தது காடு அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு கதையை தயார் செய்து விட்டாராம். ஆனால் நடிகர் சிம்புவுக்கு வேறு ஒரு எண்ணம் இருந்திருக்கின்றது. முதல் பாகமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கின்றார்.
இதனால் முதல் பாகம் எடுத்துக் கொண்டிருந்த 25 நாட்களிலேயே 2-வது பாகத்தின் மீதான ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அதே சமயம் அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் அதாவது இதைவிட சற்று பட்ஜெட் அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்ததால் எனக்கும் அவருக்கும் செட்டாகவில்லை.
கருத்து வேறுபாடு என்று சொல்வதை காட்டிலும் இரண்டாவது பாகத்தை எடுப்பதில் சலிப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் சூர்யாவை துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருந்த கௌதம் மேனன் அதன் பிறகு நடிகர் தனுஷை வைத்து அவர் இயக்கியிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை தான் இயக்கவே இல்லை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்காதது குறித்தும் குறை சொல்லி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய நடிகர்களை குறித்து தொடர்ந்து தனது பேட்டிகளில் குறை கூறி வருகின்றார் கௌதம் மேனன் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.