சொன்னா மட்டும் போதுமா? செயல்ல காட்டணும்.. தனுஷ பார்த்து கத்துக்கணும் சிம்பு

by ராம் சுதன் |

சிம்பு: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படம் இவருக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸாக இருந்தது. அந்தப் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த படமாகவும் மாறியது. அந்தப் படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என பேக் டூ பேக் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார் சிம்பு.

அதன் பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆனார். ஆனால் அவர் போதாத காலம் அந்தப் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. கடைசியில் தக் லைஃப் படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வர அந்தப் படத்திற்கு போய்விட்டார். தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சிம்புவை திரையில் பார்க்க போகிறார்கள் ரசிகர்கள்.

தொடர் அப்டேட்: தக் லைஃப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட அப்டேட்களை கொடுத்து மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் சிம்பு. இந்த நிலையில் சிம்புவின் இந்த தொடர் அப்டேட்டை பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் போது வெறும் அறிவிப்போடு சிம்பு நின்று விடக் கூடாது. இப்போ பாருங்க. இன்னும் சூட்டிங்கிற்கே அவர் கிளம்பவில்லை. அவர் எப்போது சூட்டிங்கிற்கு போவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பெரிய பட்ஜெட்: அதுமட்டுமில்லாமல் ஒரு வரலாற்று கதையில் நடிக்க போகிறார். அதுவும் அந்தப் படத்தை சிம்புதான் தயாரிக்க போகிறார். 100 கோடி பட்ஜெட்டில் அவர் எடுக்கிறார் என்றால் கண்டிப்பாக அதை திரும்ப் எடுத்துவிடுவார். ஆனால் சம்பளம் அவருக்கு வராது. அவ்வளவுதான். ஆனால் இத்தனை இயக்குனர்களை கமிட் செய்து வைத்திருக்கிறார். அடுத்தடுத்து படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தை கொடுக்க வேண்டும் சிம்பு.

அடித்து நொறுக்கும் தனுஷ்: ஆனால் தனுஷை பாருங்க. ஒரு பக்கம் தான் இயக்கிய படத்தின் புரோமோஷன் நடந்து கொண்டிருக்கிறது. அதுக்கு அவரால் வர முடியாமல் ஒரு பக்கம் ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் இட்லி கடை படத்தின் போஸ்ட் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். மற்ற நடிகர்கள் தனுஷை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி பிஸியாக இருந்தாலும் தனுஷ் முகத்தில் எப்போதும் ஒரு சாந்தம் தான் தெரியும் என தனஞ்செயன் கூறினார்.

Next Story