ஆண்டவன் படைச்சான்.. எங்கிட்ட கொடுத்தான்.. சிம்புவின் திடீர் சந்தோஷத்துக்கு என்ன காரணம்.. ஒருவேளை?

by ராம் சுதன் |

சிம்புவின் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ. சமீபகாலமாக அவரைப் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. கிட்டத்தட்ட அவருடைய நடிப்பில் படங்கள் ரிலீஸ் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அவருடைய நடிப்பில் பத்து தல திரைப்படம் தான் ரிலீஸ் ஆனது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து அவர் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாகவே வெளியானது.

அந்த படங்களுக்குப் பிறகு சிம்புவும் ஒரு பேட்டியில் நடிப்புக்கு தீனி போடும் படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்ற வகையில் கூறியிருந்தார். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார். அந்தப் படமும் அப்படியே கைவிடப்பட்டது.

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தார். அந்த படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் அவருடைய பிறந்தநாள் அன்று தொடர்ந்து மூன்று படங்களின் அப்டேட் குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படத்திலும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

ஆனால் இன்னும் இந்த படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் தான் இருக்கின்றன. இதற்கிடையில் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகள் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இப்போது திடீரென ஒரு டீசர் வெளியாகி இருக்கிறது. அந்த டீசரை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவேளை பிகில் 2 திரைப்படமாக இருக்குமோ என கூறி வருகின்றனர்.

ஏனெனில் அந்த வீடியோ ஆரம்பத்திலேயே பந்தை எட்டி உதைப்பது மாதிரி படமாக்கி இருக்கிறார்கள். அதை வைத்து பிகில் 2 திரைப்படமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் இது ஏதோ ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கும் என தெரிகிறது. அது என்ன விளம்பரம் என்பது இனிமேல் தான் தெரியவரும். ஏற்கனவே ராஜா காலத்து உடையில் இருந்தவாறு ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார் சிம்பு. இப்போது வெளியான டீசரில் ஆண்டவன் படைச்சான் அனுபவி ராஜா அனுபவி என்ற பழைய காலத்து பாடலும் ஒலிக்கிறது. அதனால் இது என்ன மாதிரியான சூட் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story