இவங்களை நம்பி எல்லாம் போச்சி!. கமல் - சிம்புவால் நடுத்தெருவில் நிற்கும் தேசிங்கு பெரியசாமி!..
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு கோலிவுட்டில் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார். மாநாடு திரைப்படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கொடுத்தது.
அந்த படத்திற்குப் பிறகு அவருடைய ரேஞ்சும் மாறியது. தொடர்ந்து படங்களை கைவசம் வைத்திருந்த சிம்பு வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற அடுத்தடுத்த பெரிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்தார்.
ஆனால் பத்து தல படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் ஆகியும் சிம்புவின் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை. பத்துதல படத்திற்கு பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்க பெரிய பட்ஜெட்டில் சிம்பு அவருடைய 48வது படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் சில பல பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் ஒப்பந்தமானார் சிம்பு.
இப்போது அந்த படத்தில் தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவின் 48வது படத்தை நாங்கள் தயாரிக்கப் போவதாக இல்லை என ராஜ்கமல் கூறி அந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதனால் அந்தப் படத்தை நானே எடுத்து தயாரிக்கிறேன் என சிம்பு கூறியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தக் லைஃப் படத்திற்க்கு பிறகு சிம்புவை வைத்து ஒரு பக்கம் மலையாளத்தில் பெரிய ஹிட் ஆன 2018 படத்தின் இயக்குனர் ஒரு படத்தை எடுக்கப் போவதாகவும் இன்னொரு பக்கம் டைனோசர் படத்தை எடுத்த இயக்குனர் சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கப் போவதாகவும் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால் சிம்பு தன்னுடைய 48வது படத்தை அடுத்த வருடம் அதாவது பிப்ரவரி அல்லது ஏப்ரலில் தொடங்கலாம் என தேசிங்கு பெரியசாமி இடம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தேசிங்கு பெரியசாமிக்கு பெரும் அதிருப்தி தான் என்ற சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த படம் அறிவிப்பு ஆனதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக அவர் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் சிம்புவின் படத்தையே நம்பி இருந்தார். இப்போதும் சிம்பு உறுதியாக எதுவும் சொல்லாமல் அடுத்த வருடம் பார்க்கலாம் என சொல்லி இருப்பதும் மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் ஒருவேளை சிம்புவின் 48வது படம் நடக்குமா நடக்காதா என்ற வகையில் பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.