Categories: latest news

பத்துல தல இல்ல.. ரெட்ட தலயா இருக்கும் போல! சிம்பு வெற்றிமாறன் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்டா?

தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு ஆளே மாறி போய் ஃபுல் பார்மில் இருக்கிறார். இனிமேல் ஒழுங்காக கால்ஷீட் கொடுத்து படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்தார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பேன் என்றும் உறுதியாக கூறினார்.

இதற்கு இடையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்காலிகமாக அந்தப் படத்தை தள்ளி வைத்திருக்கின்றனர். காரணம் அந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஐடி ரெய்டில் மாட்டிக் கொள்ள இப்போதைக்கு அந்தப் படத்தை கையில் எடுப்பதாக இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்ததாக தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் அவருடைய 50வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. ஆனால் அதற்கு முன் வேறொரு படத்தில் நடித்துவிடலாம் என்ற முடிவெடுத்துதான் வெற்றிமாறனுடன் இணைந்தார் சிம்பு. இது யாரும் எதிர்பார்க்காத ஒரு கூட்டணி. உடனே அனைவரும் இது வடசென்னை 2தான் என கூறினார்கள். ஆனால் வடசென்னை 2 வேறு. சிம்புவை வைத்து எடுக்கும் படம் வேறு என சொல்லப்பட்டது.

இருந்தாலும் வடசென்னை பேக் டிராப்பில்தான் இந்தப் படமும் உருவாக போகிறது என்று சொன்னார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக வடசென்னை படத்தில் நடித்த ஆண்டிரியா, கிஷோர் என அடுத்து சிம்பு படத்திலும் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படமாக்கினார்கள். அதில் சிம்பு அவர் அருகில் நெல்சன் இருந்தார்.

அந்த ப்ரோமோ வீடியோ நேற்று அமாவாசையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு நாள் ப்ரோமோ வீடியோ சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட வேண்டியது இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் முதலில் வெளியான அந்த ஸ்டில்லில் சிம்பு ஒரு மாதிரியான கெட்டப்பில் லுங்கி கட்டிக் கொண்டு நின்றிருப்பார். அடுத்து இன்னொரு கெட்டப்பில் வேறொரு காட்சியை படமாக்க இருக்கிறார்களாம். அதனால் ப்ரோமோ வீடியோ வெளியாகும் போது சிம்பு இரண்டு கெட்டப்களில் வருவார் என்று தெரிகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

1 hour ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago