Actor Ajith: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். தற்போது கார் ரேசிங்கில் கலந்து கொள்வதற்கு தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார் நடிகர் அஜித். இந்த வருடம் தொடக்கம் முதலே கார் ரேசிங்கில் பங்கு பெற்று வரும் அஜித் தொடர்ந்து 9 மாதங்கள் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கின்றார்.
விடாமுயற்சி திரைப்படம்: நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இதனால் வசூல் ரீதியாகவும் படம் அடிவாங்கி இருக்கின்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் அஜித்தின் வழக்கமான திரைப்படம் போல் இல்லை இரண்டாவது பகுதி மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் 2 வருடம் கழித்து அஜித்தை திரையரங்குகளில் காணும் ரசிகர்களுக்கு படம் அந்த அளவுக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி திரைப்படம்: நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் முழுவதுமாக முடிவடைந்தது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்கள் எக்கச்சக்க நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காரணம் படம் தொடங்கியதிலிருந்து படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் அஜித்தின் லுக் போன்றவை ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கேமியோ கதாபாத்திரம்: இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். இந்த மாதத்தின் இறுதியில் இப்படத்தில் இருந்து அப்டேட் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் அஜித் மற்றும் சிம்ரன் இணைந்து ஏற்கனவே பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் வாலி திரைப்படமெல்லாம் இன்றளவும் பேமஸ்-ஆக இருந்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் சிம்ரன் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…