சந்திரமுகி ஹிட் அடிச்சும் பிரபுவுக்கு பல கோடி நஷ்டம்தான்!.. எப்படின்னு தெரியுமா?..
Rajinikanth: ரஜினி ஆசையாக உருவாக்கிய கதை பாபா. இப்படத்தை அவரே தயாரித்தார். ரஜினியின் கதை, திரைக்கதையில் உருவான இந்த படம் ஹிட் அடிக்கவில்லை என்பதால் அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டு கதவை தட்டினார்கள். எனவே, அவர்களுக்கு என்ன நஷ்டமோ அதை கொடுத்துவிட்டார் ரஜினி.
ரஜினியின் திரைவாழ்வில் அப்படி அதற்கு முன் நடந்ததே இல்லை. ஒருபக்கம் விஜய் ஒரு முக்கிய நடிகராக மாறியிருந்த நேரம் அது. எனவே, 'ரஜினி அவ்வளவுதான்.. இனிமேல் விஜய்தான்' என திரையுலகில் பலரும் பேசினார்கள். அதன்பின் 4 வருடங்கள் ரஜினி எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
அதன்பின் அவரின் ஃபேவரை இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய ஆப்தமித்ரா படத்தை பார்த்தார். ரஜினிக்கு எங்கோ பொறி தட்டியது. இதை தமிழில் எடுப்போம் என்றார். பி.வாசு இயக்குனர் என்பதால் அவரின் ஃபேவரைட் ஹீரோவான பிரபுவை அழைத்து விபரத்தை சொல்லி ‘சிவாஜி பிலிம்ஸ்தான் தயாரிப்பாளர்’ என சொல்லிவிட்டார்.
பிரபுவுக்கும், அவரின் அண்ணன் ராம்குமாருக்கும் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. அப்போது அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு உதவ முன்வந்தார் ரஜினி. படமெடுக்க கையில் பணம் இல்லை. போரூரில் இருந்த ஒரு பெரிய நிலத்தை விற்றார்கள். அப்படி உருவான படம்தான் சந்திரமுகி.
முதல் வாரம் இப்படத்திற்கு பெரிய வசூல் இருக்காது. ஆனால், அதன்பின் வசூல் அதிகரிக்கும் என சொன்னார் ரஜினி. அவர் சொன்னது அப்படியே நடந்தது. 50வது நாள், 100வது நாளிலும் இப்படம் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடியது. சில தியேட்டர்களில் 1000 நாட்களும் இப்படம் ஓடி ரஜினிக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. பிரபுவுக்கு பணம் வந்து கொண்டே இருந்தது.
ஒருபக்கம், இந்த படத்தை எடுப்பதற்காக சிவாஜி குடும்பம் சென்னை போருரில் விற்ற நிலத்தில்தான் இப்போது DLF இருக்கிறது. இப்போது அந்த இடத்தின் மதிப்பு பல நூறு கோடிகள். சந்திரமுகி லாபம்தான் என்றாலும் அந்த நிலத்தின் இன்றைய மதிப்பை ஒப்பிட்டால் அது சிவாஜி குடும்பத்தினருக்கு நஷ்டம்தான் என்கிறார்கள் சிலர்.