Rajinikanth: ரஜினி ஆசையாக உருவாக்கிய கதை பாபா. இப்படத்தை அவரே தயாரித்தார். ரஜினியின் கதை, திரைக்கதையில் உருவான இந்த படம் ஹிட் அடிக்கவில்லை என்பதால் அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் ரஜினியின் வீட்டு கதவை தட்டினார்கள். எனவே, அவர்களுக்கு என்ன நஷ்டமோ அதை கொடுத்துவிட்டார் ரஜினி.
ரஜினியின் திரைவாழ்வில் அப்படி அதற்கு முன் நடந்ததே இல்லை. ஒருபக்கம் விஜய் ஒரு முக்கிய நடிகராக மாறியிருந்த நேரம் அது. எனவே, ‘ரஜினி அவ்வளவுதான்.. இனிமேல் விஜய்தான்’ என திரையுலகில் பலரும் பேசினார்கள். அதன்பின் 4 வருடங்கள் ரஜினி எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
அதன்பின் அவரின் ஃபேவரை இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய ஆப்தமித்ரா படத்தை பார்த்தார். ரஜினிக்கு எங்கோ பொறி தட்டியது. இதை தமிழில் எடுப்போம் என்றார். பி.வாசு இயக்குனர் என்பதால் அவரின் ஃபேவரைட் ஹீரோவான பிரபுவை அழைத்து விபரத்தை சொல்லி ‘சிவாஜி பிலிம்ஸ்தான் தயாரிப்பாளர்’ என சொல்லிவிட்டார்.
பிரபுவுக்கும், அவரின் அண்ணன் ராம்குமாருக்கும் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. அப்போது அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு உதவ முன்வந்தார் ரஜினி. படமெடுக்க கையில் பணம் இல்லை. போரூரில் இருந்த ஒரு பெரிய நிலத்தை விற்றார்கள். அப்படி உருவான படம்தான் சந்திரமுகி.
முதல் வாரம் இப்படத்திற்கு பெரிய வசூல் இருக்காது. ஆனால், அதன்பின் வசூல் அதிகரிக்கும் என சொன்னார் ரஜினி. அவர் சொன்னது அப்படியே நடந்தது. 50வது நாள், 100வது நாளிலும் இப்படம் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடியது. சில தியேட்டர்களில் 1000 நாட்களும் இப்படம் ஓடி ரஜினிக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. பிரபுவுக்கு பணம் வந்து கொண்டே இருந்தது.
ஒருபக்கம், இந்த படத்தை எடுப்பதற்காக சிவாஜி குடும்பம் சென்னை போருரில் விற்ற நிலத்தில்தான் இப்போது DLF இருக்கிறது. இப்போது அந்த இடத்தின் மதிப்பு பல நூறு கோடிகள். சந்திரமுகி லாபம்தான் என்றாலும் அந்த நிலத்தின் இன்றைய மதிப்பை ஒப்பிட்டால் அது சிவாஜி குடும்பத்தினருக்கு நஷ்டம்தான் என்கிறார்கள் சிலர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…