கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருப்பது தெரிந்த தகவல்கள்தான். இதனால் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் தலைக்காட்டாதவர் தன்னுடைய மூன்றாவது மகன் பிறந்ததிலிருந்து அது குறித்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.
மெரீனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அப்படம் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் அதை தொடர்ந்து வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரியரில் மிகப்பெரிய ஏற்றத்தை அவருக்கு கொடுத்தது.
தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகளும் குவிந்தது. இதை எடுத்து நிறைய வெற்றி படங்களை குவித்தார். கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் அவருடைய காதல் மனைவி ஆர்த்திக்கும் சமீபத்தில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இனி பணிப்புரிய மாட்டேன் என டி இமான் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டி வைரலான நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து ஏகப்பட்ட யூகங்கள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.
இதனால் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த தகவல் வெளியில் கசிய விடாமல் பார்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிகிறது. இதை எடுத்து சமீபத்தில் ஆர்த்திக்கு குழந்தை பிறந்த நிலையில், நம் மகனுக்கு பவன் என சிவகார்த்திகேயன் பெயர் சூட்டி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி சிவகார்த்திகேயன் இல்லத்தில் ரொம்பவே எளிமையான முறையில் அவர் குடும்பத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சிவகார்த்திகேயன் ஆராதனா, குகன், பவன் என தன்னுடைய மூன்று குழந்தைகள் பெயரையும் அதில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணைப்பில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவைக் காண: https://x.com/Siva_Kartikeyan/status/1812698610724945956
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…