வெங்கட்பிரபுவுக்கே கண்டிஷன் போட்ட SK. தேவர்மகன் டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:33  )

தேவர் மகன் படத்துல 'ஆத்தா.... நான் கொடுத்த பாலெல்லாம் ரத்த ஆறா ஓடுதே...'ன்னு ஒரு டயலாக்கைக் கமல் எழுதி இருப்பாரு. அதே மாதிரி வெங்கட்பிரபு எஸ்.கே.வை எங்க இருந்தோ கூட்டிட்டு வந்து கையில துப்பாக்கி எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. ஆனா பால் எல்லாம் ரத்தமாத் தான் போகும் போல என்கிறார் வலைப்பேச்சாளர் அந்தனன்.

என்னன்னு பார்த்தா சமீபத்துல விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் கோட். அதுல சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் பண்ணியிருப்பார். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் அது. விஜய்க்கு அடுத்ததாக எஸ்.கே. தான் என்ற பெரிய விவாதத்தையேக் கிளப்பியவர் வெங்கட்பிரபு.

அவருக்கு எஸ்.கே. ஒண்ணும் பண்ணலையாம். அதனால ஒரு பலனும் இல்லையாம். என்னங்க இப்படி சொல்றீங்க? எஸ்.கே. நடிக்கிற சத்யஜோதி தயாரிக்கிற படத்தையே வெங்கட்பிரபு தான் பண்ணப் போறதா சொன்னாங்கன்னு வலைப்பேச்சு பிஸ்மி கேட்கிறார்.

ஆனா இப்போ அதுக்கு வாய்ப்பு இல்லைன்னுட்டாராம் எஸ்.கே. ஏன்னா நிறைய படங்கள் பண்ணிக்கிட்டு இருக்காராம். '2025 கடைசில தான் உங்களுக்கு டேட்'னு சொல்லிட்டாராம். '2025 எண்டுக்குப் போகும்போது 2026 ஆகாம இருந்தா சரிதான்' என்கிறார் பிஸ்மி. ஆனா இதுக்கு இடையில வேற ஏதோ ஒரு புராஜெக்ட்டுக்குப் பேசினாராம். ஒருவேளை அது தள்ளிப்போனதால தான் இங்க வந்துட்டாரு போல என்கிறார் அவர்.

வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளிக்கு விருந்தாக வரும் படம் அமரன். கமல் தயாரிப்பில் வருகிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

SK.23 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிறது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் 2 படமும் தயாராகி வருகிறது. அதே போல வெங்கட்பிரபு இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் வருகிறது என்றும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story