SK: ஸ்பெஷல் புகைப்படத்துடன்... கமாண்டிங் ஆபிஸர் அமரனாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்!... செம வைரல்!..
இந்திய சினிமாவின் அடையாளம் நடிகர் கமலஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையை புகுத்தி பலரையும் ஆச்சரியப்பட வைப்பவர். இதனாலே இவரை பலரும் தங்களது ரோல் மாடலாக பார்த்து வருகிறார்கள். 5 வயதில் கேமரா முன் நின்று நடித்து அசத்திய கமலஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் அனைத்து சேனல்களிலும் சிறந்து விளங்க கூடியவர்.
சினிமா மட்டும் இல்லாமல் உலக விஷயங்கள் அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கின்றார். பள்ளி கல்வியை கூட சரியாக முடிக்காத கமலஹாசன் சினிமாவில் பல பிஹெச்டி முடித்திருக்கின்றார். தற்போது வரை கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் நிற்கவில்லை. புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வமுடைய இவர் தற்போது ஏஐ டெக்னாலஜியும் கற்றுக் கொள்வதற்கு அமெரிக்கா சென்றிருக்கின்றார்.
233 படங்களில் நடித்து இருக்கும் கமலஹாசன் சினிமாவில் வித்தியாசமான பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிக்காத கதாபாத்திரம் என்று எதுவுமே கிடையாது. சமீபத்தில் மக்கள் நீதி மையம் என்கின்ற கட்சியை தொடங்கிய இவர் சினிமாவிலிருந்து அரசியலில் களம் புகுந்தார். ஆனால் சினிமாவில் ஜொலித்த அளவுக்கு அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.
அதனை புரிந்து கொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த கமலஹாசன் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். இந்த படம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை, படுதோல்வியை சந்தித்தது.
அது மட்டும் இல்லாமல் இந்தியன் தாத்தாவை ட்ரோல் செய்து வந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு காலை முதலே சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஸ்பெஷலான புகைப்படத்துடன் நடிகர் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'கமாண்டர் ஆபீஸர் அமரனாக கமலஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு மிகச் சிறந்த படத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி' என்று பதிவிட்டு இருக்கின்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றது. இந்த படத்தை கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.