சூர்யா மட்டுமில்ல!.. சிம்பு படத்தையும் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!.. சரவெடியா இருக்கே!...

by சிவா |
சூர்யா மட்டுமில்ல!.. சிம்பு படத்தையும் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!.. சரவெடியா இருக்கே!...
X

Sivakarthikeyan: காமெடி கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின் தனது ரூட்டை மாற்றி சீரியஸான கதையை கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதற்கு காரணம் அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

மற்ற நடிகர்களை போல இயக்குனர்கள் நம்மை தேடி வரட்டும் என காத்திருக்காமல் பெரிய இயக்குனர்களை அவரே தொடார்பு கொண்டு ‘நாம் இணைந்து படம் பண்ணுவோம் சார்’ என பேசுகிறார். அதன் விளைவாகவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்க துவங்கினார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கிறது. முருகதாஸ் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் படத்தை எடுத்து வருவதால் அந்த படம் முடிந்தபின் மதராஸி படத்தை முடித்து கொடுப்பார் என்கிறார்கள்.

சூர்யாவுக்கு சூரரைப்போற்று எனும் சிறந்த படத்தை கொடுத்தவர் சுதா கொங்கரா. இந்த படம் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களுக்கு காட்டியது. அதன்பின்னர் 1964ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக்கருவாக வைத்து சுதா கொங்கரா ஒரு கதை எழுதியிருந்தார். புறநானூறு என்கிற தலைப்பில் சூர்யா அதில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியிட்டப்பட்டது. ஆனால், கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்ய சொல்ல சுதா கொங்கரா மறுத்துவிட்டார். எனவே, அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை.

இப்போது சிவகார்த்திகேயன் நடிக்க பராசக்தி என்கிற தலைப்பில் அப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், சிம்பு நடிக்க வேண்டிய படம் ஒன்றும் சிவகார்த்திகேயன் கைக்கு சென்றுவிட்டது. 2018 என்கிற திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ஜேட் அந்தோணி ஜோசப் சிம்புவிடம் ஒரு கதை சொல்லி ஓகே செய்து வைத்திருந்தார்.

ஆனால், இந்த கதையை அவர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சொல்ல ‘நம்மிடம் சிவகார்த்திகேயனின் கால்ஷீட் இருக்கிறது. அவருக்கே பண்ணுங்கள்’ என சொல்ல இப்போது அது டேக் ஆப் ஆகிறது. அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 2026ம் வருடம் துவங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி மற்ற நடிகர்கள் நடிக்க ஆசைப்பட்ட கதைகள் சிவகார்த்திகேயன் பக்கம் போவது பல நடிகர்களுக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story