எதிர் நீச்சல் துவங்கி மதராஸி வரை!.. எஸ்.கே.வின் பழைய டைட்டில் செண்டிமெண்ட்!...

by சிவா |
எதிர் நீச்சல் துவங்கி மதராஸி வரை!.. எஸ்.கே.வின் பழைய டைட்டில் செண்டிமெண்ட்!...
X

Sivakarthikeyan: மிமிக்ரி கலைஞர், விஜய் டிவியில் ஆங்கர் என கெரியரை துவங்கி மெல்ல மெல்ல சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மெரினா திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கியவர்தான் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

கோலிவுட்டில் வளர்ச்சி: மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே சீனியர்களை தாண்டி முன்னேறிப் போனார். ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி பல நடிகர்களையும் பொறாமைபட வைத்தார். விஜய் டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் இந்த இடத்தை பிடித்தபோது நாமும் ஏன் பிடிக்க முடியாது என ஹீரோவாக நடிக்க துவங்கியவர்தான் சந்தானம். ஆனால், எஸ்.கேவுக்கு கிடைத்த வெற்றி சந்தானத்திற்கு கிடைக்கவில்லை.

அமரன் செய்த சாதனை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. நடித்து வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில்தான் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பு மதராஸி என வைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜூன் தயாரித்து நடித்து 2006ம் வருடம் வெளியான திரைப்படத்தின் தலைப்பு இது.

பழைய படங்களின் தலைப்பை தன் படத்திற்கு வைக்கும் செண்டிமெண்ட் சிவகார்த்திகேயனுக்கு இப்போது வந்தது இல்லை. தனுஷின் தயாரிப்பில் நடித்த படத்திற்கு எதிர்நீச்சல் என தலைப்பு வைக்கப்பட்டது.. அது பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்து வெளியான திரைப்படமாகும். கமலின் காக்கிச்சட்டை பட தலைப்பும் அவரின் படத்திற்கு வைக்கப்பட்டது.

ரஜினி பட தலைப்பு: அதேபோல், ரஜினியின் வேலைக்காரன், மாவீரன் பட தலைப்புகளும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு வைக்கப்பட்டது. கார்த்திக் நடிப்பில் 1992ம் வருடம் வெளிவந்த அமரன் பட தலைப்பும் அவருக்கு கிடைத்தது. இதையெல்லாம் விட முக்கியமாக நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய பராசக்தி பட தலைப்பும் இப்போது அவருக்கு கிடைத்திருக்கிறது.

மதராஸி: இப்படி பழைய படங்களின் தலைப்பு வைக்கப்பட்ட எல்லா படங்களும் சிவகார்த்திகேயனும் ஹிட் படமாக அமைந்துவிட்டதால் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படத்திற்கு அர்ஜூன் பட தலைப்பான மதராஸி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செண்டிமெண்ட்டை சிவகார்த்திகேயன் எப்போது விடுவார் என்பது தெரியவில்லை.

Next Story