SK: களைக்கட்டிய நெப்போலியன் மகன் திருமணம்!... சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த எஸ்கே... ஷாக்கான மணமக்கள்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:58:25  )
sk
X

#image_title

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக 80'ஸ் 90'ஸ் காலகட்டத்தில் வலம் வந்தவர் நெப்போலியன். முதலில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் வில்லனாக அசதி வந்த இவர் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் தசை சிதைவு நோய் காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டிலானார். தற்போது அங்கு விவசாயம், சாப்ட்வேர் பிசினஸ் என தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

அவ்வப்போது சினிமாவிலும் கிடைக்கும் படங்களில் நடித்து வருகின்றார் நெப்போலியன். நெப்போலியன் வீட்டில் தற்போது திருமண கொண்டாட்டம் கலைக்கட்டி இருக்கின்றது. இன்று அவரது மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் திருமணம் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து ராதிகா சரத்குமார், கலா மாஸ்டர், மீனா, பாண்டியராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜப்பான் சென்று இருக்கிறார்கள்.

திருமணத்திற்காக வந்த அனைத்து பிரபலங்களையும் விமானத்திலேயே பூங்கொத்து கொடுத்து வரவேற்று 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார் நெப்போலியன். தொடர்ந்து திருமணத்தில் ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்தது.

இன்று காலை திருமண நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஹல்தி பண்டிகையை முன்னிட்டு மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அதை தொடர்ந்து மணமக்களுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

wedding

#image_title

இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்து பலரும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியின் போது தனக்கு நடிகர் சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

இதனால் திருமண விழாவில் வீடியோகால் மூலமாக சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். அந்த வீடியோ காலில் 'தனுஷ் மற்றும் அக்ஷயா இருவருக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள். இப்போது இருப்பது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனுஷ் தம்பி உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். அதேபோல் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நெப்போலியன் சார் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க எப்பவுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் சார். என்னுடைய கடினமான நாட்களில் எல்லாம் நிறைய சப்போர்ட்டாக என் கூட இருந்திருக்கிறீங்க. அதற்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்' என்று மணமக்களை மனதார வாழ்த்தி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

Next Story