கிங்காங் ஃபேமிலிக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!.. வைரலாகும் வீடியோ!…

Published on: August 8, 2025
---Advertisement---

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். 1988ம் வருடம் முதல் சினிமாவில் நடித்து வருகிறார். பல படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அதிசயப்பிறவி படத்தில் பிரேக் டேன்ஸ் ஆடி ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.

வடிவேலுவுடன் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். அதில் சுறா, போக்கிரி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தசாமி, தெனாலி ராமன் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கிங்காங்கின் மகளுக்கு திருமணம் நடந்தது.

எனவே, டி.ராஜேந்தர், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பலருக்கும் பத்திரிக்கை வைத்தார். அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தர்ராஜன், அன்புமணி ராமதாஸ் போன்றோருக்கும் பத்திரிக்கை வைத்தார். திருமணம் காலையில் நடந்து அன்று மாலையே திருமண வரவேற்பு நடந்தது.

அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். சினிமா உலகை பொறுத்தவரை விஷால், டி.ராஜேந்தர் மற்றும் சின்ன சின்ன காமெடி நடிகர்கள் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற பலரும் கலந்துகொள்ளவில்லை. கிங்காங் சின்ன காமெடி என்பதால்தான் அவர்கள் திருமணத்திற்கு செல்லவில்லை என சமூகவலைத்தளங்களில் பேசினார்கள்.

இந்நிலையில், இன்று காலை சிவகார்த்திகேயன் கிங் காங்கின் வீட்டுக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுக்கு பரிசளிப்பும் கொடுத்தார். அதன்பின் அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் எல்லோரிடமும் பேசிவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Courtesy to cineulagam

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment