சிவகார்த்திகேயன் தான் அந்த விஷயத்துல 'நம்பர் ஒன்'... தனுஷ், சிம்புவை எல்லாம் ஓரம் கட்டிட்டாரே!
உலகநாயகன் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கிறார்கள். அந்த வகையில் படத்திற்கான வரவேற்பு குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
தீபாவளி ரேஸ்ல முதல் 3 இடத்துக்குள்ள சிவகார்த்திகேயன் வந்துட்டாருங்கறாங்க. உண்மையிலேயே வந்துட்டாரான்னு கேட்டா வந்துட்டாரு. நம்பிக்கைக்கு உரிய இடத்துல இருக்காரு. பெரிய சம்பளம் வாங்குறாரு. இன்னைக்கு தனுஷ், சிம்புவை எல்லாம் தாண்டி மேல வந்துட்டாரு.
அதை ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும். அவங்க ரெண்டு பேரும் தான் ஒரு காலத்துல அஜித், விஜய் மாதிரி போட்டியில வருவாங்கன்னு நம்பப்பட்ட சூழல்ல திடீர்னு அவங்களைத் தாண்டி ஒருத்தர் வந்து நிக்கிறாரு. விக்ரம் எல்லாம் தாண்டி இன்னைக்கு ஒரு பிசினஸ் அவருக்கு இருக்கு. அதுவே பெரிய விஷயம்.
அவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, கடன்பத்திரத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டது, அது மட்டுமல்லாமல் சம்பாதிச்சதை எல்லாம் திரும்ப அதுக்குள்ளேயே போட்டது அவ்வளவையும் அவரு பண்ணினாரு. அந்த தியாகத்தை இன்னைக்கு எந்த நடிகருமே பண்ணல. எனக்கும் சம்பளம் பாக்கின்னா படமே வரலன்னா கூட பரவாயில்லை.
என் காசைக் கொடுன்னு நின்ன கூட்டம் தான் இங்கே. ஆனா அதுல இருந்து ஒரு ஆள் மாறுபட்டு சிந்திக்கறாரு. நம்ம லைஃப் இதுக்குள்ள இருக்கு. பணத்தை நாளைக்கு வேணா சம்பாதிச்சிக்கலாம். படம் வெளியே வரட்டும். நான் எத்தனை பத்திரத்துல வேணாலும் கையெழுத்துப் போடறேன்னு யாரு ஒருத்தர் இறங்கி தன் மீது நம்பிக்கை வச்சிருக்காரு சிவகார்த்திகேயன். அது நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கலந்த ஹீரோவாக வந்து அப்புறம் காதல் பண்ணும் வழக்கமான ஹீரோவாக வந்தார். அப்புறம் குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி நடிச்சி மாஸ் ஹீரோவானார். இப்போ கொஞ்சம் ஆக்ஷன்ல இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அதுதான் அமரனா உருவெடுக்கக் காரணம்.