தல தளபதி ரசிகர்களை தன் பக்கம் இழுத்த SK! ‘அமரன்’ படத்தில் இத கவனிச்சீங்களா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:53  )

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று ரிலீஸான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக இந்து வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

உண்மையிலேயே ஒரு ராணுவ வீரராகவே இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய பாடி டிரான்ஸ்ஃபர்மேஷனாக இருக்கட்டும். ராணுவ வீரர் எப்படி ஒரு கம்பீரமான தோற்றத்தில் இருப்பாரோ அதே மாதிரியான ஒரு பிம்பத்தில் தன்னை காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

குறிப்பாக சாய்பல்லவி ரசிகர்கள் அனைவரையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு ராணுவ வீரரின் மனைவி எப்படி தன் ஒவ்வொரு நாள்களையும் நிம்மதியில்லாமல் கழிக்கிறாள் என்பதை தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவத்தை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தாலும் அதில் ஒரு அழகான காதல் கதையும் உள்ளடங்கியதாகவே இருந்தது.

இது பார்ப்பவர்களை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என கொண்டாடி வருகிறார்கள். அதுவும் கோட் படத்தில் கையில் விஜய் துப்பாக்கி கொடுத்த நேரம் அமரன் திரைப்படத்தில் ஏகே 47 துப்பாக்கியையே தூக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மாறியிருக்கிறது என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயனை பாராட்டி வந்தார்கள். மொத்தத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் சமீபகாலமாக பார்க்கப்படுகிறார். இதற்கு ஏற்றாற்போல அமரன் படத்திலும் விஜய் , அஜித் ரெஃபரன்ஸ்களை வைத்து மேலும் அந்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒரு காட்சியில் விஜயின் துப்பாக்கி படத்தையும் இன்னொரு காட்சியில் விஸ்வாசம் படத்தின் சில கிளிம்ப்ஸ்களை காட்டி ஒட்டுமொத்த திரையரங்கையும் அலற வைத்திருக்கிறார்கள் அமரன் படக்குழு. ஒரு பக்கம் விஜய் அரசியல். இன்னொரு பக்கம் அஜித் ரேஸ் என பிஸியாக இருப்பதால் அடுத்த சினிமா வாரிசாக சிவகார்த்திகேயன் தான் இருக்கப் போகிறார் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார்கள்.

Next Story