விஜய்கிட்ட துப்பாக்கி.. அஜித்கிட்ட? சிவகார்த்திகேயன் சொன்னதை கேளுங்க

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:18  )

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததில் இருந்து விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் குறிப்பாக அந்த சீனில் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து இதை வச்சுக்கோங்க சிவா என சொல்ல அதற்கு சிவகார்த்திகேயன் உங்க வேலைய நீங்க போய் பாருங்க. இவங்கள நான் பார்த்துக்கிறேன் என சொன்னது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதாவது விஜய் இப்போது அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அவருடைய 69 ஆவது படம் தான் கடைசி படம். அதன் பிறகு முழுமூச்சாக அரசியலில் இறங்கப் போகிறார். சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இதை உணர்த்தும் விதமாக இனிமேல் கோலிவுட்டில் விஜய்க்கு அடுத்தபடியாக யார் என்ற ஒரு கேள்வி எழுந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் கோட் படத்தில் இந்த சீனை வைத்திருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதுவும் விஜய் சம்மதத்துடனே இந்த டயலாக் இருந்ததனால் சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்பதை விஜயே ஒப்புக் கொண்டார் என்பதைப் போல இந்த காட்சி நமக்கு உணர்த்தியது.

இப்படி விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான இந்த காட்சியை ரசிகர்கள் எங்கு போனாலும் சிவகார்த்திகேயனிடம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை பற்றி சிவகார்த்திகேயன் கூறிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அஜித்தை ஒரு சமயம் சிவகார்த்திகேயன் சந்தித்து பேசிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அப்போது சில அட்வைஸுகளை சிவகார்த்திகேயனுக்கு அஜித் கூறி இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. அப்போது எங்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனை பார்த்ததும் அஜித் பைக் ரைடு போயிருக்கீங்களா சிவா என கேட்டாராம் .

அதற்கு சிவகார்த்திகேயன் பைக்கை எடுத்து லோக்கலில் சென்று இருக்கிறேன். உங்களை மாதிரி வெகு தூரம் போனதில்லை என்று சொன்னாராம் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அந்த மாதிரி ஒரு பைக்கை வாங்கிக்கொண்டு ஓட்டிப் பழகி அஜித்துடனே சேர்ந்து ஒரு ரைடு கண்டிப்பாக போகவேண்டும் என ஆசையாக இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். வாழ்க்கையில் சிலவற்றை எக்ஸ்ப்ளோர் செய்வது மிக முக்கியம் என்றும் கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Next Story