என்னை முதலில் நம்பியது அவர்தான்!.. அவர் மட்டும் இல்லன்னா!.. உருகிய எஸ்.கே!…

Published on: March 18, 2025
---Advertisement---

Sivakarthikeyan: விஜய் டிவில் விஜே-வாக வேலை பார்த்தவர் சிவகார்த்திகேயன். அதற்கு முன் இசைக்கச்சேரிகளில் மிமிக்ரி கலைஞராக வலம் வந்தார். இவரின் அப்பா திருச்சியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே எஸ்.கே.வின் அப்பா இறந்துவிட நாமும் அப்பாவை போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், அவரின் அம்மா அதை அனுமதிக்கவில்லை. எனவேதான் மிமிக்ரி பக்கம் போனார். அதன்பின் விஜய் டிவியில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் அப்படி வேலை செய்தார். அப்போதே சினிமாவில் நுழையவேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்தது. மெல்ல மெல்ல வாய்ப்பு தேடினார். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.

பொதுவாக திருமணமாகிவிட்டால் பலரின் கனவுகளும், ஆசைகளும் கலைந்து போய்விடும். ஏனெனில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஏதேனும் ஒரு வேலையோ அல்லது தொழிலையே செய்ய வேண்டி வரும். ஆனால், சிவகார்த்திகேயனை அதை எப்படியே சமாளித்தார்.

தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் டேக் ஆப் ஆனார். இப்போது 70 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது.

இந்நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசும்போது ‘மாமனார் என்பது எல்லோருக்கும் முக்கியமான உறவு. ஆகாஷுக்கு பிரிட்டோ சார் போன்ற ஒரு நல்ல மாமனார் அமைந்திருக்கிறார். எனக்கெல்லாம் யாரும் பெண் கொடுக்கவே மாட்டார்கள். ஏனெனில், திருமணம் செய்தபோது நான் ஒரு நல்ல வேலையில் இல்லை. விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தினால் 4 ஆயிரம் கொடுப்பார்கள்.

அப்போது என் மாமனார்தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் சினிமாவில் நுழைய ஆசைப்படுவதை தெரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இல்லாமல் நான் சினிமாவில் வந்திருக்க முடியாது. என் மீது நம்பிக்கை வைத்த முதல் மனிதர் அவர்தான்’ என நெகிழ்வாக பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment