அமரன் படத்தை அப்பவே கணித்த கமல்... எஸ்கே நெகிழ்ந்து சொன்ன விஷயம்

கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வசூல் வேட்டையாடிய படம் அமரன். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேஜர் முகுந்தவரதராஜனின் பயோபிக்கையே படமாக எடுத்துள்ளார்கள்.
வெற்றி வாகை: தேசப்பற்று கொண்ட வீரமிக்க இளைஞராக மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவரது மனைவி இந்துவாக சாய்பல்லவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான வேட்டையன், கங்குவா படங்களை விட வசூலை வாரிக்குவித்து அமரன் வெற்றி வாகை சூடியுள்ளது.
வெற்றி விழா: அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நேற்றுமுன்தினம் நடந்தது. படவிழாவில் தயாரிப்பாளர்கள் பாதி சம்பளத்தை புடுங்கிடுறாங்கன்னு சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அதே நேரம் சிவகார்த்திகேயன், கமல் படத்தில் நான் நடிப்பது என்று முடிவானதும் கமல் என்ன சொன்னார்? படம் முடிந்து போட்டுப் பார்க்கும்போது என்ன சொன்னார் போன்ற தகவல்களை நெகிழ்ச்சியுடன் இப்படி தெரிவித்துள்ளார்.
மூவர்ண ரிப்பன்: படம் ஷூட் பண்றதுக்கு முன்னாடி நான்தான் ஹீரோன்னு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்னாரு. அப்போ நீங்க ஊதா கலரு ரிப்பனா இருந்தாலும் அதுக்கு ஒரு ஷார்ப்னஸ் இருக்குல்ல. கரெக்டா பண்ணிடுவார்னு சொல்லி இருக்கீங்க.
அப்புறம் ரிலீஸ்சுக்கு முன்னாடி படம் பார்த்துட்டு அந்த ஊதா கலரு ரிப்பன் இப்ப மூவர்ண ரிப்பனா மாறிடுச்சுன்னு சொன்னீங்க. அப்போவே எனக்கு தெரிஞ்சிடுச்சு. இந்தப் படம் ஹிட் தான்னு என்கிறார் சிவகார்த்திகேயன்.
தக் லைஃப்: கமலைப் பொருத்தவரை அவரு பேனரில் தயாரான விக்ரம் மாபெரும் வெற்றி. தொடர்ந்து அமரனும் ஹிட். ஆனால் இந்தியன் 2 பிளாப். இந்தியன் 3 வருமா? ஹிட் அடிக்குமா? என விமர்சனம் வருகிறது. ஷங்கரும் கமலை முழுமையாக இந்தப் படத்தில் நம்பி இருக்கிறார். படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளன. அதனால் அவருக்கும் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிலை. இப்படி இருக்க தக் லைஃப் ஜூன் 5ல் வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.