அமரன் வெற்றி!.. கள்ளழகரை மனைவியுடன் சென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. செம வைரல்..!

by ramya suresh |
அமரன் வெற்றி!.. கள்ளழகரை மனைவியுடன் சென்று சந்தித்த சிவகார்த்திகேயன்.. செம வைரல்..!
X

நடிகர் சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கின்றார். சினிமாவில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அமரன் வெற்றி:

தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்திருந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியானது முதலே மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவுமே இல்லாமல் படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது 350 கோடியை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் லைன்அப்:

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அடுத்ததாக டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த இரண்டு படங்களையும் முடித்த கையோடு இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கவும் கமிட்டாகி இருக்கின்றார்.

தொடர்ந்து கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக இருந்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார்.

மனைவியுடன் சாமி தரிசனம்:

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் வெற்றியை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரையில் இருக்கும் அழகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இவரை கோயிலில் பார்த்ததும் அங்கு பக்தர்கள் கூடி நின்று சிவகார்த்திகேயனுடன் புகைப்படம், செல்பி எடுக்க முயற்சி செய்தார்கள்.

கோவிலுக்கு சிவகார்த்திகேயன் வருவார் என்ற தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதால் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அழகரை தரிசித்த பிறகு அங்கிருந்த பூசாரிகளும், பக்தர்களும் சிவகார்த்திகேயனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Next Story