Categories: latest news

எனக்கு அந்த நடிகைதான் வேண்டும்!,, புது படத்துக்கு அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக வேலை பார்த்து கெரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டார். நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் மெரினா படத்தில் அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. மனம் கொத்திப் பறவை என சில படங்களில் நடித்தாலும் எதிர்நீச்சல் படம் இவரை கவனிக்க வைத்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. அந்த படங்களின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் ஒரு முக்கியமான நடிகராக மாறினார். அதோடு அவரின் சம்பளமும் அதிகரித்தது. மிகவும் குறுகிய காலத்திலேயே அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓரம் கட்டி முன்னேறினார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பல நடிகர்களுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. அமரன் பட வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. அந்த படம் 300 கோடி வரை வசூல் செய்து விட்டது. அந்த படத்திற்கு பின் 70 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறிவிட்டார்.

அமரன் படத்திற்குப் பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன். தற்போது மதராஸி படம் முடிந்துவிட்டது. இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஒருபக்கம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதில் பெரிய குழப்பமே நீடித்தது.

வெங்கட் பிரபு, குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் மற்றும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என பலரையும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் சிபி சக்கரவர்த்தி, விநாயக் சந்திரசேகர் என இருவரின் பெயரும் மாறி மாறி அடிபட்டது. இப்போது சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கப்போவது சிபி சக்கரவர்த்தி என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் தனது ஜோடியாக மிருனள் தாக்கூர் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறாராம்.

எனவே அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் ரசிகர்களிடம் பிரபலமானவர் மிருனள் தாக்கூர். தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலம் ஆக்கிவிட்டது, எனவே இவரோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என கோலிவுட்டில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

13 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

14 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago