இந்த வருஷம் தீபாவளியும் நமக்குதான்.. விஜய் இடத்தை புடிக்க ஃபுல் ஃபோக்கஸ்தான் போலயே..!

by ramya suresh |
இந்த வருஷம் தீபாவளியும் நமக்குதான்.. விஜய் இடத்தை புடிக்க ஃபுல் ஃபோக்கஸ்தான் போலயே..!
X

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

மேலும் மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறி வருவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருப்பதால் தொடர்ந்து அரசியல் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றார். இருப்பினும் ஜனநாயகம் என்கின்ற திரைப்படத்திலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து படத்தின் அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முதல் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியான நிலையில் அதில் படத்தின் டைட்டிலை அறிவித்திருந்தார்கள். அதன் பிறகு மாலை 4 மணிக்கு நான் ஆணையிட்டால் என்று நடிகர் விஜய் கையில் சாட்டையை வைத்து சுழற்றுவது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஆரம்பத்தில் கூறியிருந்த நிலையில் அதன் பிறகு நேற்று வெளியான எந்த போஸ்டரிலும் அக்டோபர் மாதம் வெளியாவதற்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கிடையில் தற்போது இந்த தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே 23 திரைப்படம் வெளியாவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் எஸ்.கே 23. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இந்த ஆண்டு நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகம் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகாது என்று தெரிந்தவுடன் அந்த இடத்தை நிரப்புவதற்கு சிவகார்த்திகேயனின் எஸ்.கே 23 திரைப்படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story