ஒரே கெட்டப் போட்டு போர் அடிச்சிடுச்சு! ‘சர்தார் 2’வில் ரூட்டை மாற்றிய எஸ்.ஜே. சூர்யா.. இது அவருல?

by ராம் சுதன் |

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்தார். இந்தப் படத்தில் கார்த்தி முதன் முறையாக வயதான கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆஃபிஸிலும் படம் சாதனை படைத்தது. சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் ஹிட்டானால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைப்பார்கள்.

அந்த வகையில் கார்த்தியின் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக தெரிவித்து இப்போது அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சர்தார் 2 படம் ஆரம்பித்து மூன்றாவது நாளில் படக்குழு ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது,

20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி திரையுலகமே சோகத்தில் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு வில்லனாக நடிக்கிறார். எந்த படமானாலும் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக இப்போது எஸ்.ஜே.சூர்யாதான் நடித்து வருகிறார். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறாராம்.

சொல்லப்போனால் சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்தின் கெட்டப்பை போல இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வருவார் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஒரு பெரிய மேட்டராக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி ஒரு கெட்டப்பில் எஸ்.ஜே.சூர்யா நடித்தே இல்லை.

நடிக்கிற எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான வேடங்களில் தான் வில்லனாக நடித்து வருகிறார். முற்றிலும் தனது கெட்டப்பை மாற்றி நடித்ததே இல்லை. அதனால் சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா இது வெறும் டிரெய்லர். மெயின் பிக்சர்ஸ் இனிமேதான் பார்க்கப் போறீங்க என்றெல்லாம் பேட்டிகளில் கூறி வரும் நிலையில் அவரின் அடுத்தகட்ட ஸ்டெப் என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story