Categories: latest news

நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்துக்கு வந்த முதல் ரிவ்யூ.. எஸ்.ஜே சூர்யா சொன்னத பாருங்க..!

Actor Dhanush: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு நடிகர் தனுஷ் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து ஒரு காதல் திரைப்படமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய காலத்தில் காதல் எப்படி இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் தனுஷ்.

இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.

இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடல் யூட்யூபில் செம டிரெண்டிங்கில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக படத்தை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இப்படம் எப்போது வெளியாகும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கின்றது. அதுவும் இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த பதிவு தற்போது இணையதளம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ‘நடிகரும் இயக்குனருமான தனுசுடன் சேர்ந்து நிலவுக்கு என்னுடைய என்மேல் கோபம் திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஒரு பொழுதுபோக்கான வேடிக்கையான இளம் தலைமுறைகளை கவரும் தனித்துவமான படம் இது.

மேலும் தனுஷ் உங்களிடம் ஒரு கேள்வி ராயன் படத்திற்குப் பிறகு மிக பிசியாக இருந்த போதும் எப்படி உங்களால் இப்படி ஒரு அழகான படத்தை எடுக்க முடிந்தது. என்ன மாதிரியான இயக்கம். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திற்கு முதல் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் 90% முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago