எனக்குன்னே வருவீங்களா?... உச்சகட்ட 'கடுப்பில்' ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழின் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விசிட் அடித்திருக்கிறார். பொதுவாக இந்த கோயிலுக்கு செல்லும் ஆண்கள் சட்டையை கழட்டி விட்டு கோயிலுக்கு உள்ளே சாமி கும்பிட செல்வது வழக்கம்.
அதேபோல முருகதாஸும் தன்னுடைய சட்டையை கழட்டி விட்டு கோயிலுக்கு உள்ளே உதவியாளர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் முருகதாஸ் சட்டை இன்றி இருப்பதை தொடர்ந்து வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இதைப்பார்த்த முருகதாஸ் கூச்சத்துடன் அதுபோல செய்யாதீர்கள் என்று கூற அந்த ரசிகர் கேட்கவே இல்லையாம். தொடர்ந்து ஒரு கட்டத்தில் இது மிகப்பெரும் வாக்குவாதமாக மாறியுள்ளது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் இந்த விஷயத்தில் முருகதாஸ்க்கு தான் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன்பிறகு தான் அந்த வீடியோ பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்ததாம். சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் SK 23 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடக்கவிருக்கிறதாம்.
இதையொட்டி சாமி தரிசனம் செய்யப்போன இடத்தில் தான் மேற்கண்ட களேபரம் நிகழ்ந்துள்ளது. சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடிப்பில் உருவாகி வரும் SK 23படம் சிவகார்த்திகேயன் கேரியரில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முருகதாஸ் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.