SK 25: இதுக்கா இவ்வளவு பில்டப்பு!.. எஸ்கே 25 படத்தின் டீசர்.. வெளியான முக்கிய அப்டேட்..!

Actor Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன். அதன்பிறகு சில வருடங்களிலேயே படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கின்றார். ஆரம்பத்திலிருந்து மெரினா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ என சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் ஒரே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறி இருக்கின்றார். இவர் கடந்த ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த ஒரு திரைப்படம் சிவகார்த்திகேயனை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றது. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், கமல், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் சாதனையை முறியடித்து முன்னேறி இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.
கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் சீரியஸான கதைகளிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை அமரன் திரைப்படத்தின் மூலமாக நிரூபித்து காட்டி இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே25 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் கடந்த சில நாட்களாக சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டிலை வைக்க இருப்பதாக கூறி வந்தார்கள். இந்த டைட்டில் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படத்தின் டைட்டில் ஆகும். இதனை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி வந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இன்று படத்தின் டைட்டில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. இதற்கு காரணம் பராசக்தி என்கின்ற டைட்டிலை வைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்து கொண்டிருப்பதால் நாளை இப்படத்தின் டீசரை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பார்கள் என்று கூறி வருகிறார்கள்.