Categories: latest news

அடுத்த விஜயா?.. ரஜினியா?!.. பெரிய நடிகர்களுடன் கூட்டணி போடும் எஸ்.கே..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் படிப்படியாக முன்னேறியவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய காலத்தில் சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். இவருக்கு முன்பு சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களை ஓவர்டேக் செய்து மேலே போனார்.

அவ்வளவு ஏன்?. சிவகார்த்திகேயனை தனது எதிர்நீச்சல் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாக்கிய தனுஷையும் ஓரங்கட்டி அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இவரை ரசிகர்கள் சுருக்கமாக எஸ்.கே என அழைக்கிறார்கள். இவரின் டாக்டர், டான் போன்ற சில படங்கள் 100 கோடி வசூலை பெற்றது.

அதுவும் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது. எனவே, தனது சம்பளத்தை 70 கோடியாக எஸ்.கே. ஏற்றிவிட்டார். இப்போதைக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். இவரின் வளர்ச்சியை பார்த்து பல நடிகர்களும் பொறாமைப்படுகிறார்கள்.

இதை அஜித்தே ஒருமுறை அவரிடம் கூறியிருக்கிறார். முன்பெல்லாம் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் இப்போது பெரிய இயக்குனர், சீரியஸான கதை, பெரிய தயாரிப்பு நிறுவனம் என டார்கெட் பண்ண துவங்கிவிட்டார். அமரன் வெற்றிக்கு பின் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தியிலும், முருகதாஸ் இயக்கத்திலும் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் சினிமாவை விட்டு விலகும் நிலையில் அவரின் இடத்தை பிடிக்கவேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருக்கிறது. அவர் இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள். விஜய் இல்லாத காரணத்தினால் சில இயக்குனர்களின் பார்வை எஸ்.கே பக்கம் திரும்பியிருக்கிறது. பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

பராசக்தி, மதராஸி மற்றும் சிபி சக்ரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றை முடித்துவிட்டு இந்த படத்தில் எஸ்.கே நடிப்பார் என்கிறார்கள். மொத்தத்தில் அடுத்த விஜய் ஆவதற்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறார் என்றே புரிகிறது. விஜயின் ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதேபோல், ஜெயிலர் படத்தில் கேமியோ வேடத்தில் வந்தார். எனவே, அவரோடு நடிக்கும் ஆசை எஸ்.கே.வுக்கும் வந்துவிட்டது போல!..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago