Categories: Cinema News latest news

சினேகன் – கன்னிகா வெளியிட்ட கியூட் வீடியோ… அட இது செம சர்ப்ரைஸா இருக்கே!..

Snegan: தமிழ் சினிமாவின் ஹிட் பாடலாசிரியராக இருக்கும் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தங்களுடைய முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களை எழுதி ஹிட்டடித்தவர் சினேகன். 500 படங்களில் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கிறார். பாண்டவர் பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையிலே பாடலை எழுதி வெற்றி கண்டார்.

இதை தொடர்ந்து பாடல்கள் மட்டுமல்லாமல் சில துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அதை தொடர்ந்து தமிழ் பிக்பாஸின் முதல் சீசனில் கலந்து கொண்டார். நாமினேஷனுக்கே செல்லாமல் கடைசி வாரம் வரை பயணம் செய்தார்.

டாஸ்குகளில் அதிரடி காட்டிய சினேகன் பலருக்கும் புதுசு தான். அந்த சீசனில் சினேகனின் அப்பா வந்தது பலருக்கும் சுவாரஸ்யமாக அமைந்தது. அவரே சினேகனுக்கு ஒரு திருமணம் செய்வது தான் தன்னுடைய ஆசை எனவும் கூறி இருந்தார்.

அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பின்னர் நடிகை கன்னிகாவுடன் தங்களுடைய திருமணத்தை அறிவித்தார். பிரம்மாண்டமாக கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்கள். அதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இருவரும் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

சமீபத்தில் கன்னிகா மற்றும் சினேகன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். தற்போது இவர்களுக்கு அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்துள்ளனர். அதிலும் சிம்பிள்ளாக பலூன்களுக்கு இடையில் ஆடம்பரமில்லாத போஸ்ட்டை பார்க்கும் போது ஆச்சரியமாகி இருக்கிறது.

Published by
ராம் சுதன்