முடிவில்லாத காதலின் தொடக்கம்... மகனின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள்... வைரலாகும் நாகார்ஜூனா பதிவு!..
நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் துவங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நிச்சயத்தார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாகர்ஜூனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
சோபிதா துலிபாலா 2013ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவில் கலந்துக்கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் பிரபலமடைந்தார். அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் நடிகையாக கால் பதித்தார்.
இதை தொடர்ந்து மேட் இன் ஹெவன் சீரிஸ் மூலம் புகழ் பெற்றார். அதை தொடர்ந்து, பார்ட் ஆஃப் பிளட், நைட் மேனஜர், குரூப் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக அறியப்பட்டார். ஹாலிவுட்டின் மங்கி மேன் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார்.
2022ம் ஆம் ஆண்டில் இருந்து பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கிசுகிசுக்கள் கிளம்பியது. அடிக்கடி இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களும் கசிய தொடங்கியது. ஆனாலும் இரு தரப்பும் இந்த விஷயத்தினை மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளாமலும் இருந்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தொடர்ச்சியாக கிசுகிசுக்கள் கிளம்பியது. இதை தொடர்ந்தே, இன்று நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு அதிகாரப்பூர்வமாக நிச்சயம் நாகர்ஜூனா இல்லத்தில் நடப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது நாகர்ஜூனா ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
அந்த ட்வீட்டில், எங்களுடைய மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயம் நடந்து இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு சோபிதாவை வரவேற்கிறோம். முடிவில்லாத காதலின் தொடக்கத்திற்கு எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.