Categories: Cinema News

கர்ப்பமாக இருக்கும் சமந்தா… மீண்டும் கூடிய நாகர்ஜூனா குடும்பம்… நல்லா இருக்கே…

Samantha: நடிகர் நாகர்ஜூனாவின் குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சியால் மீண்டும் கோலாகலம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. இருவரின் ஜோடி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நான்கு ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்தனர்.

இதில் நடிகை சமந்தா நடிப்பை தொடர்வதை சைதன்யா குடும்பம் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் புஷ்பா பாடலுக்கு ஆடிய நடனமும் குடும்பத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சமந்தாவை விவாகரத்து செய்தார் நாக சைதன்யா.

அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்களது சமூக வலைதளத்திற்காக மூலம் தாங்கள் பிரிந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வந்தார். அடிக்கடி இருவரும் ஒன்றாக வெளியில் தோன்றிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இதை எடுத்து சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை அதிகாரப்பூர்வமாக நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தகவல் அவர்கள் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சோபிதாவின் தங்கை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிகழ்வால் தற்போது மீண்டும் குடும்பம் கோலாகலமாக நிகழ்ச்சியை கொண்டாட இருக்கின்றனர். இதில் சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஜோடியாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
ராம் சுதன்