Categories: latest news

நம்பி கதையை அனுப்பினா இப்படி சுடலாமா?!. ரசிகைக்கே விபூதி அடித்த நானி!.. ஹிட் 3 பஞ்சாயத்து!…

Nani: தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருக்கும் நானியின் மீது தமிழ் எழுத்தாளினி போட்டு இருக்கும் புகார் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு நடிகராக இருப்பவர் நானி. இவர் தன்னுடைய ரொமாண்டிக் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் காதல் படங்களில் நடித்து வந்த நானி தற்போது ஆக்‌ஷன் ரூட்டையும் பிடித்து இருக்கிறார்.

இதனால் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பிடித்த நடிகராக இருக்கிறார். தற்போது நானி தன்னுடைய புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அவி, கோர்ட் படங்களை தயாரித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஹிட் என்ற சீரிஸ் படத்தினை தயாரித்து வருகிறது இவர் நிறுவனம். முதல் இரண்டு பாக படங்கள் இன்னொரு ஹீரோவை வைத்து தயாரிக்க மூன்றாவது பாகத்தில் நானியே நடித்து இருந்தார். படம் ரத்தக்களமாக இருந்ததால் பலரிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓரளவு நல்ல வசூலை குவித்து இருக்கும் இப்படம் தற்போது பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. தமிழ் எழுத்தாளினியான விமலா வேலன் என்பவர் சோனியா விமல் என்ற பெயரில் கதை எழுதுவதை பழக்கமாக கொண்டவர்.

இவர் 2021ல் உருவாக்கப்பட்ட தன்னுடைய ஏஜெண்ட் வி கதையை அப்பட்டமாக காப்பி அடித்துதான் ஹிட் 3 படத்தினை எடுத்திருப்பதாக நானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இவரின் கதையும் ஹிட் 3 கதையும் ஒன்றாக இருப்பதாக தென்னிந்திய சினிமா எழுத்தாளர் சங்கமும் உறுதி செய்து இருக்கிறது.

சோனியா நானிக்கு எழுதிய கதையை அவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். அதை தொடர்ந்தே இப்போது இந்த பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் கதை திருட்டு தொடர்பான இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

நானியின் ரசிகையான சோனியாவுக்கும் அவரின் பிடிச்ச நடிகருக்குமான இந்த வழக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நானி மாதிரி பலருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு நடிகர் இதை செய்யலாமா என்பதையும் கேள்விகளாக எழுப்பி உள்ளனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

1 hour ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago